தோசை மாவு இல்லையா? இன்ஸ்டன்ட் தக்காளி தோசை மாவு தயாரித்து தோசை சுட்டு பாருங்க, 10 நிமிடத்தில் சூப்பரான, டேஸ்டியான தக்காளி தோசை ரெடி!

tomato-dosai-maavu
- Advertisement -

தோசை மாவு இல்லாத சமயங்களில் இன்ஸ்டன்ட்டாக தோசை மாவு அரைப்பது எப்படி? அதுவும் இது போல வித்தியாசமான சுவையுடன் கூடிய தோசை மாவு தயாரித்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்ஸ்டன்ட்டாக செய்யக் கூடிய இந்த தக்காளி தோசை ரொம்பவே சுலபமாக எப்படி நம் வீட்டில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 3, வர மிளகாய் – 3, இஞ்சி – ரெண்டு இன்ச், ரவை – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – அரை கப், உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ரெண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவு, தண்ணீர் – 400ml, மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

தக்காளி தோசை செய்முறை விளக்கம்:
தக்காளி தோசை மாவு செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று தக்காளி பழங்களை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் வர மிளகாய் மூன்றை கில்லி சேருங்கள். 2 இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதை நைசாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இதை சேர்த்து இதனுடன் ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். அதிலேயே அரை கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். நன்கு கலந்து விட்ட பின்பு ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள். இதில் இருக்கும் ரவை நன்கு ஊறிவிடும்.

- Advertisement -

அதற்குள் நீங்கள் மற்ற பொருட்களை நறுக்கி வைத்துக் கொள்ளலாம். இப்போது 10 நிமிடம் கழித்து இந்த கலவையுடன் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின்பு நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை ஒன்று இரண்டாக தட்டி சேருங்கள். அதே போல மிளகையும் தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்கு கலந்து விட்ட பின்பு ரெண்டு கிளாஸ், 400ml அளவிற்கு தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். இது ரவா தோசை போல மெல்லியதாக சுடக்கூடிய தோசை என்பதால் தோசை மாவு பதத்தில் இல்லாமல், சற்று தண்ணீராக இருக்க வேண்டும். பின்பு தோசை கல்லை சுட வைத்து ரவா தோசைக்கு எப்படி ஊற்றுவோமோ, அந்த மாதிரி மாவை சுற்றிலும் எடுத்து ஊற்ற வேண்டும். பின்னர் சிறிது நேரம் பொறுமையாக வேகும் வரை காத்திருக்க வேண்டும். நன்கு பொன் நிறமாக சிவக்க வறுபட்டதும், மெதுவாக எடுத்து திருப்பி போட வேண்டும். ரெண்டு புறமும் வெந்ததும் அவ்வளவுதான் சூப்பரான தக்காளி தோசை தயார்! இதற்கு கெட்டி தேங்காய் அல்லது கார சட்னி வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -