தக்காளி சாறுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் போட்டால், 1 இரவில் உங்களுடைய முகம் முத்து போல வெள்ளையாக மாறும்.

face4

ஒரே இரவில் உங்களுடைய முகத்தை இயற்கையான முறையில் வெள்ளையாக மாற்றக்கூடிய ஒரு வழியைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காசு கொடுத்து வெளியில் சென்று எந்த பொருட்களையும் இதற்காக நீங்கள் வாங்க வேண்டாம். மிக மிக சுலபமான முறையில் செலவே இல்லாமல் இந்த 3 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் ஒரு நாள் இரவு போட்டாலே போதும். மறுநாள் காலை உங்களுடைய முகம் வெள்ளையாக மாறி இருக்கும். அந்த ரகசிய குறிப்பை நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?

face5

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தக்காளி பழச்சாறு பிழிந்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு எல்லாம் அரைத்து சாறு எடுக்க கூடாது. கைகளாலேயே பிழிந்து தக்காளிப் பழத்தில் இருந்து சாறு எடுக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சாறு கிடைத்தாலே போதும். இந்த தக்காளி பழ சாறுடன் 1/2 ஸ்பூன் தேன், 1/4 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதை முகத்தில் பேக் போடும் அளவிற்கு கெட்டியாக பேஸ்ட் போல தயார் செய்யக் கூடாது. இந்த கலவை கொழகொழப்பாக தண்ணீர் பதில் தான் இருக்க வேண்டும். இந்தக் கலவையை ஒரு பிரஷ் கொண்டு உங்களுடைய முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிரஷ் இல்லாதவர்கள் கையில் எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். ஆனால், கையில் எடுத்து முகத்தில் அப்ளை செய்யும்போது கொஞ்சம் சிரமம் இருக்கும். கீழே எல்லாம் சிந்தும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

honey 2

இந்தக் கலவையை முகத்தில் ஒரு முறை போட்டு நன்றாக உலர வைத்து விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்குள் உங்களுடைய முகத்தில் இருக்கும் இந்த கலவையானது நன்றாக இருக்க பிடித்துக் கொள்ளும். மீண்டும் அதன் மேல் இந்த கலவையை இரண்டாவது முறை தடவி உலர விடுங்கள். இதேபோல மூன்றிலிருந்து நான்கு முறை இந்த கலவையை முகத்தில் தடவிஉலர விட்டு விடுங்கள். குறைந்தது மூன்று முறையாவது, இப்படி இந்த கலவையை உங்களது முகத்தில் கோட்டிங் செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் முகத்தில் இருக்கும் இந்த கலவையின் மேல் லேசாக தண்ணீர் தெளித்து இருக்கி பிடித்து இருக்கும் தன்மையை, தளர செய்ய வேண்டும். அதன் பின்பு உங்களுடைய இரண்டு கைகளை தண்ணீரில் நனைத்து முகத்தை வட்ட வடிவத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து கொடுத்து, அதன் பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவி கொண்டாலே போதும். உங்களுடைய முகம் உடனடியாக வெள்ளை நிறத்தில் மாறும். இரவு இப்படி செய்து விட்டு, சோப்பு போட்டு முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கி விட வேண்டும். மறுநாள் காலை நீங்களே நம்பமுடியாத அளவிற்கு வெள்ளையாக மாறி இருப்பீர்கள்.

Gothumai

இரவு இப்படி செய்ய முடியாதவர்கள் பகலிலும் இப்படி செய்யலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி, ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து கொண்டால் உங்களது முகத்தின் நிறம் நிரந்தரமாக வெள்ளையாக மாறும். இதே கலவையில் தக்காளி பழச்சாறு தேனோடு சேர்த்து அரிசி மாவு சேர்த்துக் கொண்டு, முகத்தை மாதத்தில் 2 நாள் ஸ்கரப் போல செய்து சுத்தம் செய்து கொண்டாலும், முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.