புதுவிதமான சுவையில் தக்காளி மசாலா பூரி. உடனே ட்ரை செய்து பாருங்கள் இதன் சுவைக்கு பத்து பூரி சாப்பிட்டாலும் பத்தாது

poori
- Advertisement -

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவதற்கு இன்றைய அம்மாக்கள் பல விதங்களில் பல தரபட்ட முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான முயற்சிகள் எல்லா நேரங்களிலும் கை கொடுக்குமா என்று கேட்டால் கேள்விக்குறிதான். குழந்தைகள் தானாக விரும்பி சாப்பிடுவதென்பது அரிதான விஷயமாக தான் இருக்கும். அவ்வாறான குழந்தைகளையும் விருப்பமாக சாப்பிட வைக்க இந்த தக்காளி மசாலா பூரியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். நீங்களே அசந்து போய்விடுவீர்கள். அந்த அளவிற்கு உங்கள் குழந்தைகள் இன்னும் ஒன்று வேண்டுமென்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அவ்வாறு சுவையான இந்த தக்காளி மசாலா பூரியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 3, கோதுமைமாவு – 300 கிராம், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மஞ்சள் – தூள் கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 3 தக்காளியை நன்றாக கழுவி கொண்டு தேங்காய் சீவல் பயன்படுத்தி நன்றாகக் துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் துருவிய தக்காளியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

tomato

அதன்பின் இவற்றுடன் 300 கிராம் கோதுமை மாவை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். முடிந்தவரை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கெட்டியாக பிசைந்து விட்டு இறுதியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவு முழுவதிலும் நன்றாக தடவி விட்டு, 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிட வேண்டும்.

- Advertisement -

அதன் பின் ஊற வைத்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் எப்போதும் போல பூரிக்கு மாவு திரட்டுவது போல திரட்டிக் கொண்டு, பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் திரட்டி வைத்த மாவினை ஒவ்வொன்றாக சேர்த்து பூரி சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கிரஸ்பியான தக்காளி மசாலா பூரி தயாராகிவிட்டது.

poori5

இந்த தக்காளி மசாலா பூரியுடன் தொட்டுக்கொள்ள ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொண்டு, அதனுடன் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து விட்டால் சுவையான தேங்காய் சட்னி தயாராகிவிடும். இவ்வாறு நீங்களும் தக்காளி மசாலா பூரியுடன் தேங்காய் சட்னி வைத்து ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்து பாருங்கள். மீண்டும் ஒரு முறை இந்த பூரி செய்து தாங்க அம்மா என்று உங்கள் குழந்தைகள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்.

- Advertisement -