சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த தக்காளி முட்டை ஆம்லெட் குழம்பை ஒரு முறை செய்து கொடுங்கள். இதனைப் பார்த்த உடனே தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்

muttai1
- Advertisement -

பெண்களுக்கு வீட்டில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவற்றை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கும். அவர்களை சமாதானப்படுத்தி, விளையாட்டுக் காட்டி இருக்கின்ற சாதத்தை சாப்பிட வைக்க வேண்டும் அதுவே அவர்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி தினமும் இவர்களுக்கு பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற முட்டை ஆம்லெட் தக்காளி தொக்கை செய்து கொடுத்து பாருங்கள். தட்டாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் சுவையான முட்டை குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 5, தக்காளி – கால் கிலோ, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து வேண்டும். நன்றாக சூடானதும் அதில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, எண்ணெயில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றரை ஸ்பூன் தனியாத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கடாயை ஒரு தட்டு போட்டு மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடத்திற்கு தக்காளி குழைந்து வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் கடாயின் மீதுள்ள தட்டை திறந்து தக்காளியை நன்றாக கலந்துவிட வேண்டும்.

தக்காளி வதங்கும் போது அதிலிருந்து வருகின்ற தண்ணீரே இந்த குழம்பிற்க்கு போதுமானதாக இருக்கும். குழம்பில் எண்ணெய் நன்றாக பிரிந்து வந்ததும் ஒரு குழிகரண்டியல எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதன் மேல் 2 சிட்டிகை மிளகுத்தூள் தூவி அதனை குழம்பில் ஒரு ஓரமாக ஊற்றவேண்டும். இவ்வாறு ஐந்து முட்டைகளையும் இப்படியே உடைத்து ஊற்றி, தட்டு போட்டு மூடி ,10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அனைத்துவிட்டு சாதத்துடன் குழம்பை சேர்ந்து சாப்பிட வேண்டும்.

- Advertisement -