காலியான பேஸ்ட் கவரக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் அடங்கி இருக்குதா?

tooth-paste
- Advertisement -

ஆமாங்க, காலியான பழைய டூத் பேஸ்ட்டை எல்லோரும் தூக்கி குப்பையில் தான் போடுவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அந்த பழைய காலியான பேஸ்ட்க்கு பின்னால் பயனுள்ள பல குறிப்புகள் இருக்குது. அது என்ன. அதை எப்படி நாம் பயன்படுத்த போகின்றோம் என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பதிவை படித்துப் பாருங்கள். குறிப்பு தேவைப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லை என்பவர்கள் நீங்க அதை தூக்கி குப்பையில் போட்டுக்கோங்க பிரச்சனை இல்லை. காலியான பேஸ்டை மீண்டும் எப்படி பயன்படுத்துவது? காலியான பேஸ்ட் கவரை சைடில் ஓரமாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

டூத் பேஸ்ட் வீட்டு குறிப்புகள்

கவருக்கு உள்ளே நிறைய பேஸ்ட் ஒட்டி இருக்கும். பேஸ்ட் கவரை வெட்டாமல், அதை நசுக்கி எடுத்தால் நம்மால் சுலபமாக வெளியே எடுக்க முடியாது அல்லவா. இப்போது இந்த கவரை ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து போட்டு நன்றாக கழுவி விடுங்கள்.

கவரில் ஒட்டி இருக்கும் பேஸ்ட் மொத்தம் அந்த தண்ணீரில் வந்துவிடும். இந்த தண்ணீர் வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும். நல்ல பேஸ்ட் வாசத்தோடு இருக்கும். அதை அப்படியே சின்ன பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அல்லது ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் கூட அதில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது இது நமக்கு சுத்தம் செய்யக்கூடிய லிக்வீடாக பயன்படும். சமையல் மேடை, ஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ், உங்கள் வீட்டில் இருக்கும் முகம் பார்க்க இருக்கும் கண்ணாடி, ஜன்னல் கதவில் இருக்கும் கண்ணாடி, சிங்க், வாஷ்பேஷன் எல்லா இடத்திலும் நான் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட் லிக்விடை ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்தால் அந்த இடம் பளிச்சு பளிச்சென மாறிவிடும்.

இது மட்டும் இல்லைங்க இந்த லிக்விடை பாத்ரூம் கழுவும், டாய்லெட் கழுவும் கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கறைகள் சுத்தமாக நீங்கிவிடும். துர்நாற்றம் நிறைந்த இடம் துர்நாற்றம் இல்லாமல் மாறிவிடும். இந்த ஸ்ப்ரேவை அடித்து கண்ணாடியை ஒரு துணியால் துடைத்து எடுத்தாலே போதும் கண்ணாடி பளிச்சிடும்.

- Advertisement -

மற்ற இடங்களில் எல்லாம் இந்த ஸ்ப்ரேவை தெளித்துவிட்டு ஒரு நார் போட்டு தேய்த்து கழுவி பாருங்கள். அந்த இடம் பளீச் என மாறும். மிக மிக எளிமையான குறிப்பு தான். பேஸ்ட்டில் தண்ணீரை கலந்து வைத்திருக்கிறோம். அதனால் ஒரு வாரத்திற்கு மேலானாலும் அது கெட்டுப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. அதை அப்படியே வைத்து நீங்கள் எல்லா சுத்தம் செய்யும் விஷயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்ட் எல்லாமே பிளாஸ்டிக் கவரில் தான் நமக்கு தரப்படுகிறது. அதனால் அதை ரொம்பவும் துண்டு துண்டாக வெட்டி குப்பையில் போடக்கூடாது. அப்படி போட்டால் அந்த பிளாஸ்டிக் மூலம் சில பாதிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எந்த பிளாஸ்டிக் பொருட்களையும் துண்டு துண்டாக வெட்டும் பழக்கத்தை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: இயற்கை கொசு விரட்டி புகையை வீட்டில் போடுவது எப்படி?

அது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யக்கூடிய கேடு என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம். நாம் செய்யக்கூடிய குறிப்பு நமக்கு பயன்படும்படியும் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த ஐடியாவின் மூலம் அடுத்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.

- Advertisement -