பொடுகுத் தொல்லையால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக உள்ளதா? வெறும் 3 நாட்களில், இயற்கையான பொருட்களை வைத்து பொடுகு தொல்லையை 100% ஒழித்துவிடலாம்.

hair-pack
- Advertisement -

நிறைய பேருக்கு முடி உதிர காரணம் தலையில் இருக்கும் பொடுகு தொல்லை தான். சில பேருக்கு பேன் தொல்லை, ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். வெள்ளை நிறத்தில் அப்படியே நம்முடைய தலையிலிருந்து கொட்டிக்கொண்டே இருக்கும் அல்லவா இதை தான் பொடுகு என்று சொல்லுவோம். ஈறு என்பது முடியில் அப்படியே சின்ன சின்னதாக ஒட்டிக்கொண்டு இருக்கும். பேன் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த ஈறு, பேன், பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தரமாக, விடுபட  இயற்கையான முறையில் ஒரு பெஸ்ட் ஹேர் பேக்கை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair-pack1

இந்தப் ஹேர் பேக் தயார் செய்ய தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுப்வோம். திரிபலா சூரணம், தயிர், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய். அவ்வளவு தான், இந்த நான்கு பொருட்களை வைத்து தான் இன்று ஹேர் பேக் செய்யப்போகின்றோம். இந்த திரிபலா சூரணம் என்பது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஜாதிக்காய், நெல்லிக்காய், கடுக்காய் இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த கலவை தான் திரிபலாசூரணம். இதை தலையில் போடுவதால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. இதை வயிற்றுக்கு உள்ளேயும் மருந்தாக சாப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

ஒரு ஈரம் இல்லாத பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுக் கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் திரிபலா சூரணம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வேப்ப எண்ணெய் 1/2 ஸ்பூன், இதை ஒரு பேஸ்ட் போல் தயார் செய்ய தேவையான அளவு தயிரை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.

hair-pack2

உங்களது மண்டை ஓட்டில், மயிர்க்கால்களில் படும்படி இந்த பேஸ்டை நன்றாக அப்ளை செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி இந்த ஹேர் பேக்கை தடவி, ஹேர் பேக் போட்டு, 30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு உங்களுடைய விருப்பம் போல் தலைக்கு குளித்து கொள்ளலாம்.

- Advertisement -

வாரத்தில் மூன்று நாட்கள் இதைப் போட்டாலே போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஹேர் பேக் தலையில் போட்டு ஊற வைத்து தலைக்கு குளித்து விடுங்கள். நிச்சயமாக தலையில் இருக்கும் அரிப்பு, பொடுகு, பேன், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது படிப்படியாக குறையத் தொடங்கும். இதோடு சேர்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய முடி உதிர்வு பிரச்சனையும் படிப்படியாக குறைவதை காணலாம்.

thriphala

உங்களுடைய தலையில் பேன் தொல்லை அதிகமாக இருந்தால், வேப்ப எண்ணெயை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையில் பேன் தொல்லை இல்லை என்றால் வேப்ப எண்ணெயின் வாசம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை நீங்கள் பயன்படுத்த தேவையில்லை. இருப்பினும் வேப்ப எண்ணெயின் மகத்துவம் மிகமிக அதிகம். ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -