செவ்வாய்கிழமையில் வெற்றிலை தீபத்தை ஏற்றினால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? யாருக்கு இந்த தீபத்தை ஏற்றுவது பலன் தரும்?

murugan-vetrilai-deepam

வெற்றிலை என்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. மங்கள பொருளான வெற்றிலையில் தீபமேற்றுவது சகல தோஷங்களையும் நீக்க வல்லது ஆகும். வெற்றிலையில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் குடியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. வெற்றிலையில் இருக்கும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு தீபம் ஏற்ற வேண்டும். வெற்றிலையின் காம்புப் பகுதியில் மூதேவி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. வெற்றிலையில் ஏற்ற வேண்டிய தீபத்தை எப்பொழுது ஏற்ற வேண்டும்? யாருக்கு ஏற்ற வேண்டும்? அதன் பலன்கள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு பதிலை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vetrilai-kodi

பூக்காத தாவரமான வெற்றிலையை பலரும் ஒதுக்கி வருகின்றனர். வெற்றிலையை ஆண் தன்மையுள்ள செடியாக கூறப்படுவதால் அதனை தனியாக வளர்ப்பது என்பது வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். வெற்றிலையில் பூக்கள் பூப்பது உண்டு. எனினும் வெற்றிலை செடியை வளர்ப்பவர்கள் தனியாக அதனை வளர்க்க கூடாது. உடன் ஒரு செடியை சேர்த்து வளர்த்து வந்தால் அதிர்ஷ்ட யோகம் உண்டு. அது போல் வீட்டின் முன் பகுதியில் வெற்றிலையை வளர்ப்பதை விட, பக்கவாட்டு பகுதிகளிலும், பின் பகுதிகளிலும் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

இத்தகைய அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் வெற்றிலை எல்லோருடைய வீட்டிலும் இருப்பது நல்லது தான். வெற்றிலையில் இருக்கும் காம்பு பகுதியில் மூதேவி குடியிருக்கும். அதனால் இந்த இலை தீபம் ஏற்றும் பொழுது காம்பு பகுதியை கிள்ளி விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை தீபத்தை செவ்வாய்க் கிழமையில் ஏற்றுவது உகந்ததாகும். செவ்வாய்க் கிழமையில் மகாலட்சுமி, முருகப்பெருமான், மகா விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு தீபத்தை ஏற்றலாம்.

mahalakshmi

செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் வெற்றிலை தீபத்தை மகாலட்சுமிக்கு ஏற்றுவது சகல வளங்களையும் கொடுக்கக் கூடியது ஆகும். அதை விட செவ்வாய்க் கிழமையில் முருகப் பெருமானுக்கு ஏற்றப்படும் வெற்றிலை தீபம் கேட்ட வரத்தை கொடுக்கக் கூடியது. மிகுந்த சக்தி கொண்டுள்ளது. நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் கனவுகள் நிறைவேற முருகனை நினைத்து முருகனுக்கு செவ்வாய்க் கிழமையில் வெற்றிலை தீபம் வீட்டில் ஏற்றலாம். முருகப் பெருமானுடைய படத்தை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். முருகப் பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம் வைத்து, அவருக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து, தரையில் ‘ஓம் சரவணபவ’ என்கிற விசேஷமான கோலத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அதில் எழுத்துக்கள் வரும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வெற்றிலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையின் மேலும் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொண்டு அதில் ஒரு புது அகல் விளக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

saravanabava-kolam

பின்னர் விளக்குகளில் இலுப்பை எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். இது போல் ஏழு எழுத்துகளிலும், ஏழு அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் மனதில் நினைக்கும் அத்தனை விஷயங்களும் எளிதில் நிறைவேறுவதாக ஐதீகம் உள்ளது. இது போல் ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் காணாமல் போய்விடும். பகைவர்கள் தொல்லை நீங்கி துஷ்ட சக்திகள் ஒழிந்துவிடும் என்பது நம்பிக்கை.