Tirupati : திருப்பதியில் இங்கு சென்றால் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்படும் தெரியுமா?

tirupati
- Advertisement -

திருப்பதி திருமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அது ஒரு புனித தலம் என்றும். வேங்கட மலையில் வேங்கடாசலபதியாக அருள்புரியும் பெருமாளை தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் வழிபடும் வைணவ கோயில் என்பதும் தான். புனிதமான இந்த திருப்பதி திருமலை பகுதியை சுற்றி பல சிறப்பு வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு இடம் தான் தும்புரு தீர்த்தம். இந்த தும்புரு தீர்த்தத்தின் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

tirupati

தும்புரு தீர்த்தம் எனப்படும் புனித தலம் பற்றி திருப்பதி செல்வோர்கள் பலரும் கேள்விப்பட்டிருந்தாலும், வெகு சிலர் மட்டுமே இந்த தீர்த்தத்திற்கு சென்றிருப்பார்கள். ஏனெனில் இந்த தும்புரு தீர்த்தம் திருப்பதி மலையின் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதாலும், வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டுமே இந்த தீர்த்தத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதே காரணங்கள் ஆகும்.

- Advertisement -

தும்புரு தீர்த்தம் உருவானது குறித்து பல கதைகள் கூறப்படுகிறது. புராண காலத்தில் கந்தர்வ இனத்தை சார்ந்த பெண் ஒருத்தியை அவளது சோம்பல் குணம் காரணாமாக இந்த தும்புரு தீர்த்தத்தில் தேரையாக இருக்கும் படி சபித்து விட்டு சென்றான். பல காலம் இங்கேயே தேரை வடிவில் வாழ்ந்த அந்த கந்தர்வ பெண் அகத்தியர் மகரிஷி தனது சீடர்களோடு இந்த தீர்த்தத்திற்கு வருகை தந்த போது, இந்த தீர்த்தத்தின் மகிமையை பற்றி தனது சீடர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்த போது தேரை வடிவில் இருந்த பெண் சாப விமோச்சனம் பெற்று, மீண்டும் தனது பழைய நிலையை அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.

perumal

தும்புரு தீர்த்தத்தில் நீராடி வழிபடுபவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டங்கள் பெருகும் என்பது பல நூற்றாண்டு பக்தர்களின் திட நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தும்புரு தீர்த்தம் செல்வதற்கான தேதிகளை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வலைதள பக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும். ஒரே ஒரு தினமும் மட்டுமே அனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் தும்புரு தீர்த்தம் செல்ல கூடுகின்றனர்.

- Advertisement -

tumburu

தும்புரு தீர்த்தம் செல்வதற்கு திருமலையில் இருக்கும் பாபநாசம் அருவியிலிருந்து 16 கிலோமீட்டர் தூரம் இயற்கை எழில் பொங்கும் அடர்ந்த காட்டிற்குள் பாறைக்கற்கள் நிறைந்த வழியாக நடந்து செல்ல வேண்டும். கடினமான நிலப்பகுதி என்பதால் இங்கு வேறு எந்த ஒரு வாகன வசதிகளும் கிடையாது. வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள் இந்த பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tumburu

அடர்ந்த காட்டின் வழியே நெடுதூரம் செல்ல வேண்டியிருப்பதால் இப்பயணம் மேற்கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான அளவு உணவு, குடிநீர் போன்றவற்றை உடன் எடுத்து செல்வது நல்லது. இப்பயணத்தில் பக்தர்களுக்கு உதவ திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே உதவி மையங்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி கோயிலில் சிறப்பு கண்காட்சி

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tumburu theertham in Tamil. It is also called as Tirupati kovil in Tamil or Tirupati thumba theertham in Tamil or Tirupati thirumalai kovil in Tamil or Tirupati punidha thalangal in Tamil.

- Advertisement -