இந்த 1 பொருள் இருந்தால் போதும். 2 நிமிடத்தில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் ஹேர் டை வீட்டிலேயே தயார்.

hair
- Advertisement -

இந்த ஹேர் டை தயார் செய்ய நமக்கு தேவையான பொருள் மஞ்சள். அது விரலி மஞ்சள் ஆக இருக்கட்டும். கிழங்கு மஞ்சளாக இருக்கட்டும். அது உங்களுடைய சௌகரியம். நீங்கள் எந்த மஞ்சளை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் தூள் பயன்படுத்தக் கூடாது. கிழங்காக இருக்கும் மஞ்சள் தான் நமக்குத் தேவை. இரண்டு வகையான மஞ்சளையும் சேர்த்தும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உடனே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். மஞ்சளை முகத்தில் போட்டால் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடி உதிருமே. அதை டையாக மாற்றினால், முடி உதிராதா என்று. இந்த மஞ்சளை நாம் நெருப்பில் போட்டு எரிக்க போகின்றோம். அதனால் அதனுடைய தன்மை மாறிவிடும். பயப்படாமல் இதை ஹேர் டை ஆக பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

உங்களுக்கு தேவையான அளவு மஞ்சளை வாங்கிக் கொள்ளுங்கள். 100 கிராம், 50 கிராம் எந்த அளவில் வேண்டுமென்றாலும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு அகலமான இரும்பு கடாயிலோ அல்லது இரும்பு பேசனிலோ கற்பூரம் போட்டு அதை ஏற்றி விடுங்கள். அந்த நெருப்பில் இந்த மஞ்சள் கிழங்குகளை போட்டு கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு விட்டு நன்றாக மஞ்சளை எரிய விட்டு கருக விட வேண்டும். மஞ்சள் எரிந்து கருகி முடிக்க குறைந்தது 1 1/2 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் எடுக்கும். நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் வெட்ட வெளியாக இருக்கக்கூடிய இடத்தில் இந்த மஞ்சளை எரியுங்கள். மொட்டை மாடியில் கூட இப்படி மஞ்சளை எரிக்கலாம்.

- Advertisement -

தேவைப்பட்டால் கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி கூட இந்த மஞ்சளை போட்டு எரிக்கலாம் தவறு கிடையாது. எல்லா பொருட்களும் நன்றாக கருகி எரிந்து முடிந்த பின்பு அது ஒருநாள் இரவு முழுவதும் அப்படியே ஆரட்டும். சுட சுட போய் அதில் கையை வைக்க முடியாது. எரிந்து அடங்கி மீதம் கருப்பு நிறத்தில் நமக்கு சாம்பல் வந்திருக்கும் அல்லவா. அதுதான் நமக்குத் தேவை. அந்த சாம்பலை ஒரு கரண்டியை வைத்து நன்றாக நசுக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடர் போல அரைத்து சலித்து எடுத்தால், சூப்பரான கருப்பு நிற டஸ்டிங் பவுடர் தயார்.

இதை கண்ணாடி பாட்டிலில் போட்டு ஒரு மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்து விட்டால் வருடமானாலும் கெட்டு போகாது. இதுதான் நாம் பயன்படுத்த போகும் ஹேர் டை பவுடர். இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் பல வழிகளில் பயன்படுத்தலாம்.

- Advertisement -

தயார் செய்த இந்த டஸ்டிங் பவுடரை ஒரு ஸ்பூன் அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு கலந்தால் ஹேர்டை தயார். தலைக்கு குளித்து முடித்துவிட்டு தலை லேசாக ஈரம் இருக்கும் போது, இந்த ஹேர் டையை பிரஷில் தொட்டு அந்த வெள்ளை முடியின் மேல் அப்ளை செய்து விட வேண்டும். ஐந்து நிமிடத்தில் இந்த ஹேர்டை காய்ந்து விடும்.

பிறகு எப்போதும் போல தலையை சீவிக் கொண்டு நீங்கள் வெளியே செல்லலாம். ஆனால் இந்த ஹேர் டை பயன்படுத்தினால் நிரந்தரமாக வெள்ளை முடி கருப்பாக மாறாது. இன்ஸ்டன்டாக வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த குறிப்பு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதை இன்னொரு வழியிலும் நாம் பயன்படுத்த முடியும்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதன் மேலே சிறிய கிண்ணத்தை வைத்து அதில் வேஸ்லின் 2 ஸ்பூன் போட்டு, உருக்க வேண்டும். அதாவது வேஸ்லிங் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்தால் வாசலின் எண்ணெய் போல மாறிவிடும் அல்லவா. கரைந்த அந்த வேஸ்லினில் தேவையான அளவு இந்த மஞ்சள் ஹேர் டை பொடியை போட வேண்டும். கூடவே 1 டேபிள் ஸ்பூன் கலர் இல்லாத ஆலோவேரா ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சூப்பரான ஒரு ஹேர் டை நமக்கு கிடைக்கும்.

இது நன்றாக ஆறியதும் கொஞ்சம் திக்காக ஜெல் போல நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதையும் உங்களுடைய தலையில் அப்படியே அப்ளை செய்து கொள்ளும்போது உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக ஐந்தே நிமிடத்தில் மாறிவிடும்.

மேல் சொன்ன முறைகளில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளது. அதை நீங்க ட்ரை பண்ணி பாருங்க. இதில் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுடைய முடியும் அழகாக மாறும். தேவைப்பட்டால் இதை டஸ்டிங் பவுடர் போல அப்படியே முடியின் மேல் கூட கொட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகு ஆபத்து இல்லாமல் மேலும் அழகாக மாறும்.

- Advertisement -