- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்த எண்ணெயுடன் இதை மட்டும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் கருப்பாக இருப்பவர்கள் ஈசியாக பொன்...

இந்த எண்ணெயுடன் இதை மட்டும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் கருப்பாக இருப்பவர்கள் ஈசியாக பொன் போன்ற தங்க நிறத்தில் மின்னுவார்கள் தெரியுமா?

- Advertisement -

இயற்கையாகவே நம் உடலில் மெலனின் என்னும் மூலக்கூறு உள்ளது. இது நம்முடைய நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இந்த மெலனின் என்னும் நிறமி, மனிதனின் சருமத்தின் நிறம், தேசத்தின் நிறம் மற்றும் கண்களில் இருக்கும் கருவிழியின் நிறம் அனைத்தையும் தீர்மானிக்கிறது. மனிதன் மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கும் இந்த மெலனின் உண்டு. இந்த மெலனின் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மனிதர்களுடைய நிறம் வெவ்வேறாக உள்ளன. இதை தூண்டி விடுவதன் மூலம் நம்முடைய நிறம் கருப்பாக இருந்தாலும் பொன் போன்ற தங்க நிறத்தில் தகதகவென ஜொலிக்க செய்ய முடியும். அப்படியான ஒரு எளிய அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மெலனின் அதிகமாக சுரக்கும் பொழுது சரும நிறம் கருமை அடைகிறது. வெயிலில் சுற்றித் திருபவர்களுக்கு முகம் கறுத்து போகவும் இந்த மெலனின் காரணமாக இருக்கிறது. அதே போல வெயிலில் சுற்றாமல் ஏசியிலேயே அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மெலனின் குறைவாக சுரக்கும். இதனால் அவர்கள் செக்கச் செவேலென வெளுத்து போய் காணப்படுகிறார்கள். இப்படி இந்த மெலனின் என்னும் நிறமி மரபின்படி எல்லா உயிர்களுக்கும் சம அளவு மெலனோசைட்டுகளை கொண்டிருக்கும்.

- Advertisement -

மேற்கத்திய நாடுகளில் வெள்ளைக்காரர்கள் சூரிய குளியல் செய்வதற்கு காரணமும் இதுதான். சூரியனின் புறவூதா கதிர்கள் மெலனின் மீது படும்பொழுது அதன் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் ஓரளவுக்கு தன் அதிகப்படியான நிறத்தில் இருந்து சாதாரண நிலைக்கு வருவார்கள். அது மட்டும் அல்லாமல் சூரிய குளியல் செய்யும் பொழுது நேரடியாக புறவூதா கதிர்கள் அவர்கள் மீது படாமல் இருக்க சன் ஸ்கிரீன் லோசன்களையும் பயன்படுத்துகிறார்கள். இது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. சூரிய குளியலில் விட்டமின் D கிடைக்கிறது.

இது போல மெலனின் உற்பத்தியை குறைத்து முகத்தில் இருக்கும் நிறத்தை அதிகரித்துக் காட்ட கொஞ்சம் இயற்கையாக பச்சையாக கிடைக்கக் கூடிய மஞ்சள் கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் கிழங்குகளை தோல் சீவி நன்கு இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 50ml அளவிற்கு தேங்காய் எண்ணெயை லேசாக அடுப்பில் சூடேற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இடித்து வைத்த மஞ்சளை அதனுடன் சேர்த்து கொதிக்க வையுங்கள். தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து குளிர்வித்து விடுங்கள். நன்கு ஆறி குளிர்ந்ததும் அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் கலந்த எண்ணெயை தினமும் கை, கால் மற்றும் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து நன்கு அழுத்தி தேய்த்து விடுங்கள்.

பிறகு அப்படியே ஒரு மணி நேரம் ஊற விட்டு விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் குளித்துவிட்டு வந்தால், முகம் நல்ல பிரைட்னஸ் கொடுக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர மெல்ல மெல்ல உங்களுடைய நிறம் தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு நேரம் இருந்தால் தினமும் கூட இதை தாராளமாக செய்யலாம். இனி உங்களை கருப்பா இருக்கேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க, நீங்களும் ஈசியாக பேரழகா மாறிடலாம்!

சற்று முன்