எந்த துஷ்ட சக்தியும் நம்மை தாக்காமல் இருக்க, இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்களை சுற்றி கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வட்டம் வந்துவிடும்.

thiyanam-sivan

நல்ல சக்திகள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் இந்த பூமியில் இருந்து தான் வருகின்றது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத எதிர்மறை ஆற்றலின் மூலமாகவோ, துஷ்ட சக்திகளின் மூலமாகவோ, கண் திருஷ்டியின் மூலமாகவோ நமக்கு, பல வகையான பிரச்சினைகள் இன்றளவும் வந்து கொண்டு தான் இருக்கின்றது. எல்லா பிரச்சினைக்கும் மாந்திரீகர்களையோ, தாந்திரீகர்களையோ தேடி செல்லும் சூழ்நிலை இல்லை.

mantra sign

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, நமக்கு நாமே உடற்கட்டை போட்டுக் கொள்ள ஒரு சிறப்பான, கட்டு மந்திரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் எந்த ஒரு பயமும் தேவையில்லை. இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது நமக்கு நாமே பாதுகாப்பு வட்டத்தைப் போட்டுக் கொள்கிறோம் அவ்வளவு தான். இந்த மந்திரத்தை யார் வாயால் உச்சரித்தாலும் அவர்களை சுற்றி கண்ணுக்கு தெரியாமல் ஒரு வட்டம் வந்து விடும். அந்த வட்டத்தைத் தாண்டி துர்தேவதைகளை, கெட்ட சக்திகளை எதிர்மறை ஆற்றல் ஒருவருடைய உடம்புக்குள் புக முடியாது.

சில பேருக்கு எல்லாம் ரோட்டில் சுத்திப் போட்ட திருஷ்டியை தாண்டினாலே பிரச்சனை வந்துவிடும். இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான உடல் கட்டு மந்திரம் இதோ!

sivan-god2

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதமிரண்டும் பூமி தேவி காக்க,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க,
வயிறு மார்பும் வைரவன் காக்க,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க,

- Advertisement -

கண்ணும் புருவமும் காளி காக்க,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா
கட்டு கட்டு என் தேகம் முழுவதும்
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு,

bramma

பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம்,
நான் தொட்ட மூலி, நீ தொட்ட மூலி
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக
ஓம் சிவய நம சிவய நம சிவய நம.

sun

இந்த மந்திரத்தை எப்போது உச்சரிக்க வேண்டும்? உங்களுக்கான பிரச்சினைகள் எப்போது தொடங்குகின்றதோ, அப்போது மட்டும் உச்சரித்தால் கூட போதும். தினம்தோறும் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. சிலபேர் உச்சி வேளையில் வெளியில் சென்றுவிட்டு வந்தால், இரவு நன்றாக தூங்க மாட்டார்கள். நன்றாக பசி எடுக்காது. வாந்தி மயக்கம் போன்ற பிரச்சினைகள் வந்து விடும்.

mantra-signature

எங்கேயோ பயந்தது போல முகம் மாறி இருக்கும். இப்படிப்பட்ட தருணங்களில் அவர்களது வாயால் இந்த மந்திரத்தை உச்சரிக்க செய்யலாம். பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட அந்த நபரால், மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றாலும், உங்களது கையை அவளுடைய தலையில் வைத்துவிட்டு, நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் அதனுடைய பலன் குறிப்பிட்ட நபரை போய்ச் சேரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
வறுமை நீங்க, தீராத கடன் பிரச்சனை தீர, சுகபோகமான வாழ்க்கை பெற துர்க்கை அம்மனை 9 வாரம் ராகு காலத்தில் இந்த முறைப்படி, வீட்டில் இருந்த படியே, இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! கைமேல் பலன் உண்டு.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.