உடல் நல்ல நிறமாக மாற

face color
- Advertisement -

நல்ல நிறமாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த கிரீம்களை முகத்திற்கு தடவுவார்கள். இவ்வாறு தடவுவதன் மூலம் பல பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் முகத்தின் சருமத்திற்கும் கழுத்து கைகால் கால்களில் இருக்கக்கூடிய சருமத்திற்கும் அதிகப்படியான நிற வேற்றுமை என்பது தெரியும். இதுவே ஒருவித அசோகரித்தை ஏற்படுத்தும். இன்னும் சிலரோ முகத்திற்கு போடும் க்ரீமையே கழுத்திற்கு சேர்த்து போட்டு ஒரே நிறமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இப்படி சிரமப்படுவதற்கு பதிலாக தொடர்ந்து ஏழு நாட்கள் மட்டும் இந்த பேக்கை போட்டு குளிப்பதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கம் நிறைந்த நிற வேறுபாடுகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சரும நிறமும் அதிகரிக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய முகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முகத்தை தவிர மீதம் இருக்கும் அனைத்து பாகங்களுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில் நாம் தயார் செய்யும் இந்த பேக் நம் உடல் முழுவதும் உபயோகப்படுத்துவதற்கு மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.

இந்த பேக்கை உபயோகப்படுத்தும் பொழுது அதிக கெமிக்கல் நிறைந்த சோப்பை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக பச்சைபயிறு மாவை உபயோகப்படுத்தினால் அதன் பலன் என்னும் அதிகமாகவே இருக்கும் என்றுதான் கூற வேண்டும். எப்பொழுதுமே இயற்கையான பொருட்களுக்கு என்று பலன் கூடுதலாக தான் இருக்கும். சிறிது காலதாமதம் ஆனாலும் நிரந்தரமான நல்ல தீர்வையே தரும்.

- Advertisement -

இந்த பேக்கை செய்வதற்கு முதல் நாள் இரவே ஒரு டீஸ்பூன் அளவிற்கு கசகசாவை தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்திருக்கும் இந்த கசகசாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டிவிட்டு பிறகு அதில் ஒரு சிறிய கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தக்காளியையும் சேர்த்து இதை பேஸ்ட் பதத்திற்கு அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக தயிரை ஊற்றி நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நம்முடைய பாடி பேக் தயாராகிவிட்டது. இதை நாம் தடவுவதற்கு முன்பாக நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை எடுத்து நம் உடல் முழுவதுமோ அல்லது இந்த பேக்கை நாம் எந்த இடத்தில் உபயோகப்படுத்தப் போகிறோமோ அந்த இடங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பத்து நிமிடம் விட்டுவிடுங்கள்.

- Advertisement -

பிறகு குளிக்கச் செல்லும் பொழுது இந்த பேக்கை நம்முடைய உடல் முழுவதும் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து எப்பொழுதும் போல் குளித்துவிட்டு விருப்பம் இருப்பவர் பச்சை பயிறு மாவை வைத்தோ அல்லது கெமிக்கல் குறைந்த சோப்பை வைத்து எப்போதும் போல் குளித்துவிட்டு வரவேண்டும்.

இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் நாம் செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தின் நிறம் அதிகரிக்கும். இறந்த செல்கள் நீங்கும். சருமத்தில் ஆங்காங்கே இருக்கக்கூடிய சரும வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒரே சரிசமமான சரும நிறத்தை நம்மால் பெற முடியும். தொடர்ந்து ஏழு நாட்கள் பயன்படுத்திய பிறகு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த பேக்கை உபயோகப்படுத்தி குளித்தால் போதும் நம்முடைய சருமத்தின் நிறத்தை பாதுகாக்க முடியும்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய அதே சமயம் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து பேக் தயார் செய்து எளிதில் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் கொள்வோம்.

- Advertisement -