வெயில் காலம் தொடங்கி விட்டதால் உங்கள் உடல் எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கிறதா? இனி கவலை வேண்டாம், வாரம் ஒரு முறை இந்த வெந்தய குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்

kulambu1
- Advertisement -

இப்பொழுது முதலே வெயில் தொடங்கி விட்டது அதிலும் எப்போதும் விட ஆரம்ப நிலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது வேலைக்காக வெளியில் சென்று வருபவர்கள் தங்கள் உடல் சூட்டை தாங்க முடியாமல் தத்தளித்த போகிறார்கள் அதேபோல் வெளியில் செல்பவர்கள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லை இதனால் உடலில் நீரின் அளவு குறைவாகவே இருக்கிறது இதன் காரணமாக உடல் அதிக அளவு சூடு தன்மை அடைகிறது எனவே வயிற்று வலி அஜீரணக் கோளாறு மற்றும் தேவையற்ற உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன இவை அனைத்தையும் நாம் உண்ணும் உணவின் மூலம் தான் சரி செய்ய முடியும் முதலில் தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும் அதனுடன் நாம் சாப்பிடும் சாதத்துடன் இந்த வெந்தய குழம்பு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக மாறும் வாருங்கள் என்ற பெண் குழந்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், அரிசி – ஒரு ஸ்பூன், வெந்தயம் – 11/4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனை கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்க வேண்டும். அதன் பின் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் முக்கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து இதனை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் மீண்டும் அதே கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பத்து பல் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் 15 சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் இவை நன்றாக கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து மீண்டும் ஒரு பத்து நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வெந்தய குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -