இந்த உலகிலேயே மிகவும் நல்லவன் யார்? என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? மகாபாரத கிருஷ்ணர் இதை தான் கூறினாராம் உங்களுக்கு தெரியுமா?

mahabaratham-krishna
- Advertisement -

இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவன் யார்? என்கிற கேள்வி கேட்டால் ஒருவன் தனக்கு தெரிந்த மற்றவர்களை உதாரணத்திற்கு சொல்வானே தவிர, தன்னை தானே எவரும் கூறிக் கொள்வது கிடையாது. நான் தான் உலகிலேயே நல்லவன் என்கிற எண்ணம் நமக்கே உண்டாவது கிடையாது. அப்படி இருக்க இந்த உலகத்திலேயே நல்லவன் யார்? என்கிற கேள்விக்கு மகாபாரத கிருஷ்ணன் கூறிய அற்புதமான பதில் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

நல்லவர், கெட்டவர் என்பதை எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? நல்லது செய்தால் நல்லவர்கள் என்றும், கெட்டது செய்தால் கெட்டவர்கள் என்றும் அந்த சூழ்நிலையில் கூறிப் விடுகிறோம், ஆனால் நல்லது, கெட்டது இரண்டையும் ஒரு மனிதன் செய்து கொண்டிருக்கிறான். அப்படி இருக்க முழுமையாக ஒருவரை நல்லவன் என்றும், முழுமையாக ஒருவரை கெட்டவன் என்றும் எப்படி கூறுவீர்கள்?

- Advertisement -

மகாபாரத போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது 14ஆம் நாள் பாண்டவர்கள் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் திரௌபதி முக்காலத்தையும் அறிந்த கிருஷ்ணரிடம் இன்றைய போரில் வெற்றி யார் பக்கம்? என்று கேட்கிறாள். நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆர்வம் உனக்கு ஏன் திரௌபதி? என்று கூறிவிட்டு, என்னால் ஒன்றை மட்டும் தான் கூற முடியும்! இந்த உலகிலேயே மிகுந்த நல்லவன் ஒருவன் இன்றைய போரில் கொல்லப்படுவான் என்று கூறி விடுகிறார்.

இதை கேட்டதும் திரௌபதிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது, பாண்டவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டனர். அவர்களை பொறுத்தவரை இந்த உலகிலேயே மிகுந்த நல்லவன் பாண்டவர்களில் மூத்தவரான தர்மன் தான் ஆவார். தர்மனை விட ஒரு நல்லவன் இருக்க முடியுமா? எனவே இன்றைய போரில் தர்மன் கொல்லப்படுவான் என்று நினைத்து அனைவரும் மனம் கலங்கி போயினர். பின்னர் போரின் இறுதியில் தர்மன் கொல்லப்படவில்லை என்பதை அறிந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டானது ஆனால் தர்மனை விட நல்லவன் ஒருவன் இருக்கிறானா? யார் அவன்? என்கிற கேள்விக்கும் அவர்களுக்கு விடை கிடைத்தது. பீமன் அன்றைய போரில் விகர்ணனை வீழ்த்தியிருந்தான். விகர்ணன் துரியோதனன் உடைய தம்பிகளில் ஒருவன் ஆவான். கௌரவர்களில் விகர்ணன் தான் பாஞ்சாலியின் துகில் உரித்த பொழுது அதை எதிர்த்து நின்றவன்.

- Advertisement -

ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது, விகர்ணன் அதை எதிர்த்து குரல் கொடுத்து அறவழியில் நின்றான். இன்று போரில் தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் தன் அண்ணனுக்காக தன் உயிரையும் கொடுக்க துணிந்து போரின் அறநெறியை காப்பாற்ற போருக்கு தைரியமாக வந்து உயிர் துறந்தான். ஒருவர் நல்லவர்கள் மத்தியில் இருந்து நல்லவர்களாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. ஆனால் கெட்டவர்களுக்கு மத்தியில் இருந்தும், அறநெறியிலும், நல்லவனாகவும் இருப்பது தான் மிகச் சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. எனவே நல்லவர்கள் மத்தியில் நல்லவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் தர்மனை விட, கெட்டவர்கள் மத்தியில் நல்லவனாக வாழ்ந்து கொண்டிருந்த விகர்ணனே தர்மனை விட நல்லவன்.

இந்த உலகில் மிகச்சிறந்த நல்லவன், கெட்டவர்கள் மத்தியில் இருந்தும், வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஒருவன் நல்லவனாக வாழ முயற்சித்தால் அவனை விட நல்லவன் இருக்கவே முடியாது. எனவே எத்தகைய சூழ்நிலையிலும், நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? எப்படிப்பட்டவர்கள் உங்களை சுற்றி இருக்கிறார்கள்? என்பதை தாண்டி நீங்கள் உங்களுக்கு நல்லவர்களாகவும், இந்த உலகிற்கு நல்லவர்களாகவும் வாழ்ந்து காட்டினால் நீங்களே விகர்ணனை போல அறநெறியில் இருக்கும் இவ்வுலகில் சிறந்த நல்லவனாக விளங்க முடியும்.

- Advertisement -