இட்லிக்கு ஊற வைத்த உளுந்து 1 கைப்பிடி இருந்தா போதும் முகம் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வெள்ளையாக பளபளன்னு பட்டு போல ஜொலிக்க வைக்கலாமே! பளீச் ஸ்கினிற்கு உளுந்து ஃபேஸ் பேக் எப்படி போடுவது?

urad-dal-skin
- Advertisement -

உடல் முழுவதும் வெள்ளை வெள்ளேர் என பளிச்சென்று பளபளன்னு ஷைனிங்காக மாற்றுவதற்கு பல்வேறு விதமான தெரபிகளை பியூட்டி பார்லர் சென்று பல ஆயிரம் செலவு செய்து மேற்கொள்கின்றனர். ஆனால் முகம் மட்டுமல்லாமல், உடல் முழுவதையும் பளிச்சென்று ப்ளீச் செய்தது போல வெள்ளை வெளேர் என நான்கைந்து ஸ்கின் டோன் அதிகரிக்க செய்து ஜொலிக்க செய்ய இட்லிக்கு ஊற வைத்த உளுந்து ஒன்றே போதும். இதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் இப்போது ஒரு சூப்பரான எளிதாக ஃபேஸ் பேக் செய்யப் போகிறோம். வீட்டிலேயே இதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

ரொம்பவும் எளிதாக செய்யக் கூடிய இந்த ஃபேஸ் பேக் மிகுந்த எஃபக்டிவ் ஆனதாக இருக்கிறது. நீங்கள் இட்லிக்கு மாவு ஊற வைக்கும் பொழுது உளுந்தையும் சேர்த்து ஊற வைப்பீர்கள் அல்லவா? அந்த உளுந்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து அழுத்தினால் உடையக் கூடிய அளவிற்கு நன்கு ஊறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் துருவிய பீட்ரூட் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட் சாரில் இயற்கையாகவே நிறத்தை அதிகரித்து காட்டக்கூடிய சத்து உண்டு. இது மெலனின் அளவை சீராக்கி நம்முடைய சாதாரண நிறத்தை விட நல்ல ஒரு க்லோவான நிறம் கொடுக்க ஊக்குவிக்கிறது. எனவே ஒரு சிறு துண்டு பீட்ரூட்டை நன்கு துருவி அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாறு வருமாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் நீங்கள் உளுந்து மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் சரி, அரிசி மாவு சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு புளிக்காத தயிர் கெட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உளுந்த மாவு, பீட்ரூட் சாறு, அரிசி மாவு மற்றும் தயிர் ஆகிய இந்த நான்கு பொருட்களும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை நீங்கள் முகம் மட்டுமல்லாமல் கை, கால், கழுத்து, உடம்பு என்று உடம்பில் எந்த பகுதிகளிலும் தடவி பத்து நிமிடம் நன்கு உலர விட வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடம் நன்கு உலர்ந்து காய்ந்து வரும் பொழுது தண்ணீரால் துடைத்து எடுத்து விட்டால் போதும், உங்களுடைய முகம் அப்படியே தொட்டால் வலுக்கிட்டு போகிற அளவுக்கு ஸ்கின் நைஸ் ஆக மாறும். சரும துவாரங்களை இறுக செய்து, நம்முடைய மெலனின் அளவை கூட்டி மேலும் மேலும் நம்மை மெருகேற்றி பளிச்சென ஜொலித்திட வைக்கக் கூடிய இந்த அற்புதமான ஃபேஸ் பேக் ரொம்பவும் எளிதாகவே செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே:
இனி குதிகால் வெடிப்பை மறைக்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு நிமிடத்தில் குதிக்கால் வெடிப்பை சரி செய்ய இந்த ஒரு குறிப்பு.

இதை தினமும் அல்லது வாரம் இரண்டு முறைக்கு மேல் தடவி பாருங்கள், இரண்டு வாரத்தில் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய உடல் முழுவதும் வெள்ளையாக மாறியிருக்கும். சருமம் பல்வேறு அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. இதில் இரண்டு மூன்று அடுக்குகளுக்கு கீழ் இருக்கும் நல்ல ஒரு நிறத்தை வெளிக் கொண்டு வரக் கூடிய மேஜிக் இந்த எளிய ஃபேஸ் பேக்குக்கு உண்டு. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -