ஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்

sivan-6

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு மந்திரம் என்கிறார். அப்படி என்ன மந்திரம் அது என பார்ப்போம் வாருங்கள்.

shivan

சிவவாக்கியர் கூறியது:
“அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்”

இதை ஆராய்ந்தோமானால் “நமசிவாய” என்ற ஐயந்தெழுத்தில் ஏதோ ஒரு எழுத்தையே மந்திரம் என சிவவாக்கியர் குறிப்பிடுகிறார்.

திருமூலர் நாயோட்டு மந்திரம் பற்றி கூறுகையில் ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். நாயை நாம் எப்படி விரட்டுவோம் என்று யோசித்துமானால் “நமசிவாய” என்ற ஐயந்தெழுத்தில் எந்த எழுத்து ஒரு தனி மந்திரமாக திகழ்கிறது என்பதை அறியலாம்.

இதையும் படிக்கலாமே:
பிரச்சனைகள் அனைத்தும் தீர ஒரு மந்திரம்.

நாயை “சி போ, சி போ” என விரட்டுவோம். இதில் “சி” என்னும் எழுத்தே “நமசிவாய” என்ற ஐயந்தெழுத்தில் வருகிறது. ஆக “சி” என்னும் எழுத்தே தனி மந்திரமாக விளங்கி பல நன்மைகளை தருகிறது. இதனையே சித்தர்கள் சூட்சுமமாக நமக்கு கூறியுள்ளனர். இந்த மந்திரத்திற்கு “ஊமை எழுத்து மந்திரம்” ”பேசாத மந்திரம்” என பல பெயர்கள் உண்டு.

சிவன் மந்திரங்கள் பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தை லைக் செய்யுங்கள்.