உன் நினைவில் என் இரவு – காதல் கவிதை

Kadhal kavithai

உன்னை காண துடிக்கும்
என் கண்களை,
காலை வரை பொறுத்திருக்க
கெஞ்சுகிறேன்..
உன் நினைவோடு கொஞ்சி விளையாடும்
என் மனதை,
விடியல் வரை அமைதிகாக்க வேண்டுகிறேன்..

kadhal kavithai

உன் கால்களின் கொலுசு சத்தமும்
உன் முகத்தின் முத்து சிரிப்பும்
என் காதுகளில் ஒளித்திருக்க..
கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன் கண்மணியே..

இளையராஜாவின் காதல் பாடல்களை
எத்தனையோ கேட்டுவிட்டேன்
ஆனால் இன்னும் விடியல் வந்த பாடில்லை…
விடிந்த உடன் உன்னை கண்டால் தான்
என் கண்களுக்குள் வெளிச்சம் பிறக்கும்…
ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி
யூகங்களை மாற.. உன் நினைவுகளோடு
விடியலை நோக்கி காத்திருக்கிறேன்…

kadhal kavithai

காதலை தெரிவிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இரவில் தூக்கமின்றி தவிப்பது காலங்களின் கட்டாயமாகிவிட்டது. இது காதல் தரும் ஒரு வகையான சுகம் தான். காதலனையோ, காதலியையோ எப்போது காண்போம் என்ற ஏக்கம் உள்ள ஒவ்வொருவரின் இதய துடிப்பும் காதல் காதல் என்று தான் துடிக்கிறது. இறைவனுக்கே கூட இது சற்று வியப்பாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், நட்பு கவிதைகள் என பல தமிழ் கதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.