- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுரதிர்ஷ்டம் தரும் மச்சம்

துரதிர்ஷ்டம் தரும் மச்சம்

- Advertisement -

அதிர்ஷ்டம் என்பது கிட்டத்தட்ட நம் விதியுடன் ஒப்பிடலாம். விதிப்படி நடக்க வேண்டியவை நடந்தே தீரும் என்பது போல, அதிர்ஷ்டமும் வர வேண்டும் என்று இருந்தால் வந்தே தீரும். ஆனால் எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட நமக்கு அதிர்ஷ்டம் இல்லையே என்று புலம்புபவர்கள் மத்தியில், வெகு சிலருக்கு மட்டுமே ஜாக்பாட் அடித்தது போல ஆங்காங்கே அதிர்ஷ்டம் கை கொடுப்பதை பார்த்திருப்போம்.

நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை மச்ச சாஸ்திரம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறிவிடும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த வகையில் துரதிர்ஷ்டம் தரக் கூடிய மச்சங்கள் எங்கெல்லாம் இருக்கும்? என்னும் சாஸ்திர தகவல்களைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

அதிர்ஷ்டம் என்பதை நாம் வெறும் பொழுதுபோக்காகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதையே வாழ்க்கையாக நினைக்கும் பொழுது தான் முட்டாள் ஆகிவிடுகிறோம். குறிப்பிட்ட சில இடங்களில் நாம் பிறக்கும் பொழுதே மச்சம் இருக்கும். இது அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் எடுத்துச் சொல்லக் கூடியது என்று நம் முன்னோர்கள் கூற நாம் கேட்டிருப்போம்.

பொதுவாகவே வலது புறத்தை காட்டிலும், இடது புறத்தில் மச்சம் இருப்பது துரதிர்ஷ்டத்தையே தரும் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் உடம்பில் நாசியை எடுத்துக் கொண்டால் வலது நாசியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்றும், இடது நாசியில் மச்சம் இருந்தால் துரதிர்ஷ்டம் என்றும் கூறுவார்கள். நுனி மூக்கில் மச்சம் இருப்பது குறுகிய மனப்பான்மையைக் குறிக்கும் ஆனால் மூக்கில் வலது புறத்தில் பொதுவாக மச்சம் இருந்தால் அது பேரதிர்ஷ்டத்தை குறிக்கும். இவர்கள் செல்வந்தராகவும், சுகபோக வாழ்க்கை வாழக் கூடிய நபராகவும், வசதி வாய்ப்புகளுடன் இருப்பவராகவும் இருப்பார்கள். கலைகளில் சிறந்து விளங்குவார்கள். மக்களுடன் தொடர்பில் உள்ளவர்களாகவும், தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

- Advertisement -

இடது புறத்தில் மச்சம் இருப்பது துரதிர்ஷ்டத்தை தரும். இடக்கையில் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் துரதிர்ஷ்டம் தரும். இவர்களுக்கு கையில் பணம் தங்கவே தங்காது. உள்ளங்கையில் மச்சம் இருந்தால் பணம் நிறைய சேரும். சாஸ்திரத்தின்படி ஒரு பெண்ணுடைய தலையில் எந்த இடத்தில் மச்சம் இருந்தாலும் அவள் துரதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார். இவர்களுக்கு வாழ்க்கை என்பது நினைத்தவாறு அமைவதில்லை. தலையில் மச்சம் கொண்ட பெண்களுக்கு பேராசை குணமும், பொறாமை குணமும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு கிடைத்தாலும் அவர்கள் திருப்தி கொள்வதில்லை. இவர்கள் நினைத்ததை அடைவதில் ஒரு முன்னேற்றமும் இருக்காது. இந்த துரதிர்ஷ்டம் காலம் முழுக்க இவர்களை தொடரும்.

இதையும் படிக்கலாமே:
தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்

ஆண்களின் தொப்புளில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் இல்லை என்பார்கள். தொப்புள் மற்றும் தொப்புளை சுற்றியுள்ள இடங்களில் மச்சம் இருந்தால் பொதுவாக துரதிஷ்டத்தை குறிக்கும். இவர்களுக்கு பணத் தடையும், வருமான பிரச்சனையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவர்களால் எவ்வளவு உழைத்தாலும், பணத்தை சேமிக்கவே முடியாமல் போகலாம். ஒரு சிலருக்கு மன அழுத்தமும், விரக்தியும் அதிகமாக இருக்கும். பெண்களின் தொப்புளில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டம் தரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இடது முதுகு புறத்தில் மச்சம் இருப்பது துரதிஷ்டத்தை தரும். ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தக் கூடியதாக இருக்கிறது. பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்தின் வடிவமைப்பு மற்றும் அது இருக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து பலன்களும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்