உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை

Love kavithai

என் இரு விழிகளும்
இரவின் மயக்கத்தில் உறங்கினாலும்
என் இதயம் மட்டும்
என்னவள் உன் பெயரை
சொல்லிக்கொண்டே துடிக்குதடி..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை

பொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம் எப்படி மயங்குகிறோமோ அதே போல தான் காதல் போதை தலைகேறினாலும் ஒரு விதமான மயக்கம் இருக்கும். அது தான் காதல் மயக்கம். எந்நேரமும் காதலனோடோ அல்லது காதலியோடோ இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் அந்த போதை.

படுக்கை அறையில் பல மணி நேரம் அலைபேசி மூலம் உரையாடிவிட்டு தூங்கினாலும் அந்த தூக்கத்திலும் காதலியின் முகமோ அல்லது காதலனின் முகமோ தான் பளிச்சிடும். அது தான் காதல் போதை செய்யும் மாயம். கண்கள் உறங்கினாலும் மனம் உறங்காமல் அவர்களை மட்டுமே எண்ணி எண்ணி துடித்துக்கொண்டிருக்கும். அது தான் காதல் போதை

Love Kavithai Image
Love Kavithai

காதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், மனதை உருக்கும் அன்பு கவிதைகள் என கவிதை தொகுப்பு பல இங்கு உள்ளது.