- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்க

தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்க

- Advertisement -

பெண்கள் பலரும் தங்களுடைய கை, கால்களில், மேலும் உதட்டின் மேல் புறமும், தாடையின் கீழ் புறமும் தேவையற்ற முடிகள் வளர்வதை நினைத்து கவலைப்படும் வழக்கத்தில் இருந்து வருகிறார்கள். இந்த முடிகளை நீக்குவதற்காக கடைகளில் விற்கக்கூடிய கிரீம்களை பயன்படுத்துவதால் திரும்பவும் அந்த முடி வளர்ச்சி தூண்டப்பட்டு வேகமாக அதிகமாக வளர ஆரம்பிக்கும். இதே போல் சில அழகு நிலையத்திற்கு சென்று மெழுகு பயன்படுத்தி முடியை நீக்க முயற்சி செய்வார்கள். இது அதிக அளவில் வலியையும் வேதனையையும் தரும். இவை எதுவும் இல்லாமல் முடி தானாகவே உதிர்ந்து, திரும்பவும் வளராமல் இருக்க பயன்படுத்திய வேண்டிய கிழங்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நம் பார்க்கப் போகிறோம்.

இன்றைய காலத்தில் தான் கிரீம், வேக்ஸ் என்று என்னென்னமோ பொருட்கள் விற்கப்படுகின்றன. அதை பயன்படுத்தி தங்களுடைய உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குகிறார்கள். ஆனால் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில கிழக்கு வகைகளை பயன்படுத்தி தங்களுடைய உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அந்த முடியை உதிரவும் வைத்தார்கள். அந்த கிழங்கை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அன்றைய காலத்தில் இருந்த பெண்கள் அனைவருமே சிறு குழந்தையிலிருந்து வயதான மூதாட்டிகள் வரை மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். இந்த மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகவுமே திகழ்ந்தது. ஆனால் இன்றைய காலத்தில் இதை முற்றிலும் அறவே நிறுத்திவிட்டார்கள். அதனால் தான் தேவையற்ற சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த மஞ்சளோடு சேர்த்து நாம் இன்னும் ஒரு கிழங்கை உபயோகப்படுத்தினோம் என்றால் நம்முடைய முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.

நாம் எந்த இடத்தில் எல்லாம் இந்த கிழங்கை பயன்படுத்துகிறோமோ அந்த இடத்தில் இருக்கக்கூடிய முடிகள் உதிர்ந்து மீண்டும் வளராமல் இருக்கும். அந்தக் கிழங்கு தான் கோரை கிழங்கு. இது அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி வந்து வெயிலில் நன்றாக காய வைத்து அதை இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் கஸ்தூரி மஞ்சள் கிழங்கையும் வாங்கி வந்து காய வைத்து அதையும் தனியாக அரைத்து பொடி செய்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கோரைக்கிழங்கு பொடி ஒரு ஸ்பூன் என்றால் கஸ்தூரி மஞ்சள் பொடி அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் குளிக்கும் பொழுது சோப்பு போட்டு குளிப்போம் அல்லவா? அவ்வாறு குளித்து முடித்த பிறகு இந்த பொடியை எடுத்து எந்தெந்த இடத்தில் எல்லாம் முடி வளர்ச்சி இருக்கிறதோ? அந்த இடத்தில் எல்லாம் நன்றாக தேய்க்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். மறுபடியும் ஒரு முறை நன்றாக மசாஜ் செய்து தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலம் அந்த முடிகள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். புதிதாக எந்த முடிவுகளும் முளைக்காமல் பார்த்துக் கொள்ளும். இதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:இளநரை மறைய குறிப்பு

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கிழங்குகளை பயன்படுத்தி நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய அழகை பராமரித்து வந்தார்கள். அந்த முறையை நாமும் பின்பற்றி எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் அழகான சருமத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்