சில மாதங்களில் வரக்கூடிய, சில நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் வளர்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்போது வாராகி அன்னைக்கு உகந்த ஆஷாட நவராத்திரியோடு இந்த அஷ்டமி திதி வந்திருப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.
செல்வ வளத்தில் நீங்கள் உயர வேண்டும் என்றால், நாளைய தினம் என்ன பரிகாரத்தை செய்வது, எந்த மந்திரத்தை உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவிலில் இருந்தால் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி பைரவரை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அந்த அளவுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பைரவரை பார்க்க செல்லும் போது செவ்வரளி பூ கொஞ்சம், நெல்லிக்காய் 8, செவ்வாழைப்பழம் 8 என்ற எண்ணிக்கையில் வாங்கிச் செல்லுங்கள். நெல்லிக்காயையும் செவ்வாழைப்பழத்தையும் ஒரு தாம்பூல தட்டில் வைத்து பைரவர் பாதத்தில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
அந்த நெல்லிக்காயையும் வாழைப்பழத்தில் இருந்தும் ஒவ்வொன்று நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக எடுத்துக் கொள்ளுங்கள். அதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு கொள்ளுங்கள். மீதம் இருக்கக்கூடிய அந்த செவ்வாழையையும் நெல்லிக்காயையும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அவர்களும் செல்வ செழிப்பில் உயர வேண்டும் என்று நினைத்து இந்த தானத்தை நீங்கள் செய்யலாம்.
இந்த தானத்தை செய்வதால் உங்களுக்கும் நல்லது நடக்கும் இந்த தானத்தை பெற்றவர்களுக்கும் நல்லது நடக்கும். இந்த வழிபாடு உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரத்தில் மேல் சொன்ன பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனை தரும். அந்த பைரவ சன்னிதானத்திலேயே அமர்ந்து பைரவரது மந்திரம், பைரவர் அஷ்டகம் சொன்னால் இன்னும் சிறப்பு.
பைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து ஓம் ‘ஸ்வர்ணாகர்ஷண பைரவாய நமோ நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருக்கிறது அஷ்டகம் படிக்க முடியும் என்றால் பின் சொல்ல கூடிய இந்த பாடலை படிக்கலாம்.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்
தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
இப்படி தொடங்கக் கூடிய பைரவர் அஷ்டக பாடலை முழுமையாக பைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து படிப்பது சிறப்பான பலனை தரும். நாளை வளர்பிறை அஷ்டமி என்பதால் நீங்கள் வாழ்க்கையில் எந்த விஷயத்தில் எல்லாம் வளர்ந்து மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த விஷயங்களை எல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த அஷ்ட லட்சுமியின் ஆசிர்வாதத்தோடு சேர்ந்த பைரவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் போது நிச்சயம் நல்லது நடக்கும் நாளைய தினத்தை யாரும் தவற விட வேண்டாம்.