உப்பு ஜாடியில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும், நீங்கள் வேண்டாம், வேண்டாம், என தடுத்தாலும் பணம் உங்கள் வீட்டு கதவை தட்டும்

lakshmi-salt-jaadi
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் என்னதான் இரவும் பகலும் பாடுபட்டாலும் கூட பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த காலத்தில் நம் பண தேவைகள் அனைத்தும் தீர்ந்தபடியாக இல்லை. வருமானமே போதவில்லை எனும் பட்சத்தில் சேமித்து வைப்பதென்பது கனவு போல தான் இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் வீட்டிற்கு வரவும் வந்தப் பணம் வீண் விரையம் இல்லாமல் நம் கையிலே தங்கி இருக்கவும் சில வழிமுறைகள் உள்ளது. அதற்கு நம் வீட்டில் உப்பு ஜாடி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் சில பொருட்களை வைத்தால் போதும் பண வரவு தடையில்லாமல் நமக்கு கிடைக்கும்.

முதலில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் ஒன்பது கொட்டை பாக்குகள் நல்ல தரமான கொட்டைப்பாக்குகளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் நாணயம் எதுவாக இருந்தாலும் அதையும் இதனுள் வைத்து விடுங்கள். இதில் முக்கியமாக ஒரு வெள்ளி நாணயம் அரை கிராம் அல்லது ஒரு கிராம் அளவிற்கு கூட கடைகளில் கிடைக்கிறது அதிகபட்சம் ஒரு 100 ரூபாய்க்குள் இருக்கும். இந்த ஒரு வெள்ளி நாணயத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் உங்கள் வீட்டில் சிறிது அளவு தங்கம் ஒரு மூக்குத்தியாக இருந்தால் கூட போதும் (தங்கம் இருந்தால் வைத்து விடுங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை).

- Advertisement -

இந்த மஞ்சள் துணியில் கொட்டைப்பாக்கு, வெள்ளி காசு, நாணயம், தங்கம் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு இதை உப்பு ஜாடையின் அடியில் வைத்து விடுங்கள். இதற்கு மேல் நீங்கள் கல் உப்பை கொட்டி உபயோகப்படுத்துங்கள்.

இந்த பரிகார முடிச்சு உங்கள் வீட்டு உப்பு ஜாடையினுள் இருக்கும்போது, அந்த உப்பை நம் அசைவம் சமைக்கும்போதும் உபயோகப்படுத்தலாம் தவறில்லை. பெண்களுக்கான மாதவிலக்கு இது போன்ற எந்த ஒரு கணக்கும் இந்த உப்பிற்கு இல்லை. உங்கள் உப்பு ஜாடியின் அடியில் இந்த முடிச்சு எப்போதும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

இப்படி செய்வதன் மூலம், முதலில் பணம் வருவதற்கான வழி பிறக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பணம் வீட்டில் தங்க துவங்கும். அப்படி வரும் பணத்தில் உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். அவர்களின் மனமும் வயிறும் குளிரும்போது உங்களின் நிலை மென்மேலும் உயரத்துவங்கும்.

- Advertisement -