வீட்டை நாம் எப்படித் தான் சுத்தமாக வைத்திருந்தாலும் கூட இந்த பாத்ரூம், டாய்லெட், சிங்க் போன்ற இடங்களில் உப்புக்கறை படிந்து விடும். அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் தான். இந்தக் கறைகள் படிந்து விட்டால் அதை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. ஆனால் இந்த இடங்களை தான் நாம் அதிக சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கிருமிகள் அதிகம் உருவாகக்கூடிய இடங்களும் இவை தான். இந்தப் பதிவில் எவ்வளவு உப்பு கறை படிந்திருந்தாலும் எளிதில் அதை சுத்தப்படுத்துவது எப்படி என்று தான் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பேஸ்ட்டை நாம் உப்புக் கறை படிந்த அனைத்து இடங்களிலுமே பயன்படுத்தலாம் .பாத்ரூம், டைல்ஸ், டாய்லெட் , பாத்ரூம், டோர் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்த இந்த ஒரு பேஸ்டை நீங்கள் தயாரித்துக் கொண்டால் போதும். இதற்கு பயன்படுத்தும் பொருளை கேட்டால் நீங்கள் அதிசயத்து போவீர்கள். நாம் வேண்டாம் என்று கீழே தூக்கிப் போடும் ஒரு பொருளை வைத்து இவ்வளவு விடாப்பிடியான கறைகளை கூட நீக்க முடியுமா? என நினைப்பீர்கள். அந்த பொருள் வேறு எதுவும் இல்லை முட்டை ஓடு தான்.
இதற்கு நாம் பயன்படுத்திய பிறகு தேவையில்லை என்று தூக்கிப் போடும் முட்டை ஓடுகளை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு முழு பூண்டை தோல் உரிக்காமல் காம்பு மட்டும் எடுத்து விட்டு இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இது மை போல அரைபடாது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். அரைத்த பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்கள் வீட்டில் டாய்லெட், பாத்ரூம், சிங்க்,உப்பு கறை படிந்த இடத்தில் எல்லாம் இந்த பேஸ்ட்டை முதலில் லேசாக தேய்த்து விடுங்கள். தேய்க்கும் போது கைகளில் பயன்படுத்தாமல் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். ஸ்டில்ஸ் ரப்பர் பயன்படுத்த வேண்டாம்.
பத்து நிமிடம் இந்த பேஸ்ட் அந்த கறைகளில் நன்றாக ஊறி இருக்கட்டும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் பாத்ரூம் தேய்க்க பயன்படுத்தும் பிரஷை வைத்து லேசாக தேய்த்தாலே போதும். அதிகமாக அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. உப்புக் கறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இதில் பூண்டும் சேர்த்து இருப்பதால் ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் இந்த பேஸ்ட் பயன்படும்.
இதையும் படிக்கலாமே: இனி தேங்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள், ஒரு துண்டு தேங்காய் கூட அழுகி வீணாகாது. ஒரு வருடமே ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாமல் பத்திரப்படுத்த சூப்பர் ஐடியா.
இந்தக் குறிப்பில் முட்டை ஓட்டிற்கு பதிலாக பேக்கிங் சோடாவை சேர்த்து இந்த பேஸ்ட்டை தயாரித்துக் கொள்ளலாம். அதுவும் நல்ல பலனையை கொடுக்கும்.