இனி தேங்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள், ஒரு துண்டு தேங்காய் கூட அழுகி வீணாகாது. ஒரு வருடமே ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாமல் பத்திரப்படுத்த சூப்பர் ஐடியா.

- Advertisement -

வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் அவசர அவசரமாக சமைக்கும் போது அந்த நேரத்தில் தேங்காய் அரைத்து சமைப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்களுக்கு சமையல் வேலை மிகவும் எளிதாக முடிந்து விடும். இப்போது இந்த பதிவில் தேங்காய் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருப்பது எப்படி? அதை சமையலில் எவ்வளவு சுலபமாக பயன்படுத்தலாம் என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காயை கவுத்து வைக்க கூடாது நேராக நிற்கும்படி வைத்திருந்தால் தான் சீக்கிரம் கெடாமல் இருக்கும். தேங்காய் உடைத்து பிறகு அதில் ஓட்டிலிருந்து தனியாக எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். ஓட்டிலிருந்து எடுப்பதற்கு உடைத்த தேங்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் வேக வைத்தால் போதும், ஓட்டிலிருந்து தேங்காய் தனியாக வந்து விடும். இப்படி வேக வைப்பதால் தேங்காயின் ருசி கொஞ்சம் கூட மாறாது.

- Advertisement -

வேக வைத்த தேங்காயை ஓட்டிலிருந்து இருந்து தனியாக எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி காற்று புகாத ஒரு பாக்ஸில் போட்டு பிரீசரில் வைத்து விடுங்கள். உங்களுக்கு எப்பொழுது தேவையோ அப்போது ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எடுத்து கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்ட பிறகு சமைக்கலாம். காலை நேர அவசரத்தில் தேங்காய் உடைத்து கொண்டிருக்கும் வேலை இல்லாமல் சுலபமாக வேலை முடிந்து விடும்.

இதையே தேங்காய் பாலாக சேகரிக்க வேண்டும் என்றால், தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்து விடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அரைத்தால் உங்களுக்கு தேங்காய் பால் நல்ல திக்காக,அதே சமயம் அதிகமாகவும் கிடைக்கும். இதை ஃப்ரீசரில் ஐஸ் க்யூப்ஸ் ட்ரேவில் இந்த தேங்காய் பாலை ஊற்றி இரண்டு மணி நேரம் வைத்து விடுங்கள். அதன் பிறகு தேங்காய் பால் அனைத்தும் ஐஸ் க்யூபாக மாறியிருக்கும் இதையும் ஒரு பாக்ஸில் சேர்த்து மூடி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். தேங்காய் பால் சேர்த்து சமைக்கும் நேரங்களில் இதிலிருந்து கொஞ்சம் எடுத்து போட்டு சமைக்கலாம் இதுவும் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும்.

- Advertisement -

தேங்காய் நன்றாக மிக்ஸியில் அரைத்து ஒரு பாக்சில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம், அல்லது சிவக்க வறுத்து இந்த தேங்காய் துருவலை பாக்ஸில் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். ஒரு வருடமே ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாது. வறுத்து வைப்பதால், தேங்காயின் சுவை மாறாது. சாதாரணமாக நாம் சேர்க்கும் தேங்காயை விட வறுத்த தேங்காயை சேர்க்கும் போது குழம்பின் ருசி பல மடங்கு அதிகரிக்கும்.

அடுத்ததாக பிரிட்ஜ் இல்லாமலே கூட தேங்காய் அதிக நாட்கள் கெடாமல் பயன்படுத்த முடியும். இப்படி பயன்படுத்த நினைப்பவர்கள் தேங்காயின் குடுமி இருக்கும் முடியை முதலில் பயன்படுத்தி விட வேண்டும். அது தான் சிக்கிரம் கெட்டு போகும். தேங்காயை உடைத்தவுடன் துணி வைத்து ஈரமில்லாமல் துடைத்து விடுங்கள் அதன் பிறகு கொஞ்சம் சால்ட் எடுத்து இந்த தேங்காயின் மேல் தேய்த்து அதன் பிறகு அதன் மேல் ஒரு துணி போட்டு மூடி வைத்து விட்டால் தேங்காய் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

- Advertisement -

இதில் இன்னொரு முறையும் இருக்கிறது தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து வைத்து விடுங்கள். இதையும் பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை, வெளியில் இருந்தாலே போதும் நீங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தினமும் மாற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:: சமையலறையில் இருக்கும் பழைய கண்ணாடி பாட்டில்களை நொடிப் பொழுதில், கைப்படாமல் புதுசு போல ஜொலிக்க வைக்க வேண்டுமா? இந்த குறிப்பு உங்களுக்காக.

இந்த சின்ன சின்ன வீட்டு குறிப்புகளை நீங்களும் தெரிந்து வைத்து கொண்டால் பணம் நேரம் எல்லாம் மிச்சம் ஆவதுடன் டென்ஷன் இல்லலாமலும் வேலையை பார்க்கலாம்.

- Advertisement -