கல் உப்புக்குள் இந்த 1 பொருளை மட்டும் இப்படி வைத்து தான் பாருங்களேன்! காலாகாலத்திற்கும் உங்கள் வீட்டில் கஷ்டம் என்பதே இருக்காது. வாழ்நாள் முழுவதும் ராஜ வாழ்க்கை தான்.

uppu

எந்த ஒரு வீட்டில் கல் உப்பை மகாலட்சுமியாக பாவித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்களோ, அந்த வீட்டில் காலாகாலத்திற்கும் கஷ்டம் என்பதே வருவதற்கு வாய்ப்பே இல்லை. இருப்பினும் சில பரிகாரங்களை மேலும் முறையான வழியில் செய்யும்போது, நமக்கு அதனுடைய பலன் இரட்டிப்பாக கிடைக்கும். கல் உப்பை வைத்து செய்யக்கூடிய அப்படிப்பட்ட ஒரு சிறிய பரிகாரத்தை பற்றித்தான் இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த பொருள் கல்லுப்பு. இந்த கல்லு உப்போடு விஷ்ணு பகவானுக்கு உரிய, மகாலட்சுமிக்கு சொந்தமான மற்றொரு பொருளை சேர்த்து வைக்கும் போது, நமக்கு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பொருள்? அதை எப்படி வைக்க வேண்டும்?

salt

இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக நம்முடைய வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரு தவறை பற்றி இந்த இடத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே நம்முடைய வீட்டில் கெட்ட வாடை வீசுவதற்கு காரணம் ஈரத்தன்மை தான். எந்த இடம் எல்லாம் ஈரமாக இருந்து கொண்டே இருக்கின்றதோ, அந்த இடத்தில் கெட்டவாடை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஈரம் சீக்கிரமே உலராமல் போவதற்கு ஒரு காரணம், அந்த இடம் மிகவும் அழுக்காக இருப்பதும் தான். குளியலறையாக இருந்தாலும் சரி, கழிவறையாக இருந்தாலும் சரி சமையல் அறையாக இருந்தாலும் சரி, இந்த இடங்களிலெல்லாம் நிச்சயம் தண்ணீரின் பயன்பாடு அதிகமாக தான் இருக்கும். இப்படிப்பட்ட இடங்களை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் அழுக்கு படியாது. அந்த இடத்தில் இருக்கும் ஈரம் சீக்கிரமே உலர்ந்து விடும். அந்த இடங்களில் கெட்ட வாடை வீசுவதற்கு வாய்ப்பு இல்லை. வீட்டில் தரித்திரம் பிடிக்கவும் வாய்ப்பு இல்லை.

kitchen

எந்த இடத்தில் எப்போதும் ஈரமாக, கசகசவென்று இருக்கின்றதோ, அந்த இடத்தில் மூதேவி குடி கொள்வாள். தரித்திரம் குடிகொள்ளும் என்பதுதான் உண்மை. இனி உங்களுடைய வீட்டில் ஈரமாக கூடிய இடங்களை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடம் சீக்கிரமே காயும் அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை.

- Advertisement -

இப்படி ஈர தன்மையோடு தரித்திரத்தோடு இருக்கும் வீட்டில் எந்த பரிகாரத்தை செய்தாலும் பலன் இருக்காது. இந்த பரிகாரமும் அப்படிதான். சுத்தமே இல்லாத வீட்டில் பரிகாரத்தை செய்துவிட்டு, பரிகாரங்கள் பலன் அளிக்கவில்லை என்று கூறுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. சரி, சமையலறையில் இருக்கும் ஜாடி நிரம்ப நிரம்ப கல்லுப்பைக் நிரப்பி வைக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தானே!

bathroom-tiles-cleaning

அந்தக் கல்லுப்பைக் கொட்டுவதற்கு முன்பாக அந்த ஜாடியில் ஒரு பெரிய நெல்லிக்காயை போட்டுவிட்டு, அதன் பின்பு கல் உப்பைக் கொட்டி வையுங்கள். மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த கல் உப்போடு, இந்த நெல்லிக்காய் சேர்ந்து இருக்கும் போது வீட்டில் வறுமை நீங்கும். நிச்சயமாக வாழ்நாள் முழுவதும் நீங்கள் கஷ்டமில்லாமல் வாழ்வதற்கு இந்த சிறிய பரிகாரம் உங்களுக்குத் துணையாக நிற்கும்.

சமையல் அறையில் இருக்கும் உப்பு ஜாடியில் இப்படி ஒரு நெல்லிக்காயை போட்டு வைக்கலாம். மேலும் இதே பரிகாரம் அதிக பலன் தர வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் தீராத கஷ்டம் உடனே தீர வேண்டும் என்றால், ஒரு சிறிய கண்ணாடி பௌலில் முதலில் நெல்லிக்காயைப் போட்டு விட்டு, அந்த நெல்லிக்காய் வெளியே தெரியாத படி மேலே கல் உப்பை கொட்டி நிரப்பி, உங்கள் வீட்டு கன்னி மூலையில், ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேலே இந்த பவுலை வைத்தாலும் வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Nellikai benefits in tamil

இப்படியாக கன்னிமூலையில் உப்பை தனியாக வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடியில் ஒரு நெல்லிக்காயை போட மறக்காதீர்கள்‌. வாரம் ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ பழைய நெல்லிக்காயை எடுத்து நீங்கள் சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம். மீண்டும் புதிய நெல்லிகாயை அந்த இடத்தில் வைக்கலாம் தவறொன்றுமில்லை.

Nellikkai

வீட்டின் தென்மேற்கு மூலையை தான் கன்னிமூலை என்று சொல்லுவார்கள். வாரம் ஒரு முறை இந்த பௌலில் இருக்கக்கூடிய உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, மீண்டும் புதிய உப்பைப் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டால் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வரலாம் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.