சங்கடஹர சதுர்த்தி அன்று இந்தப் பிள்ளையாரை உங்கள் கையால் தண்ணீரில் கரைத்தால், கஷ்டமும் கடனும் கரைந்து போகும்.

pillaiyar-prayer
- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் சங்கடங்கள் தீரும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த மாத சங்கடஹர சதுர்த்தி விரதமானது வரக்கூடிய அக்டோபர் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரவிருக்கின்றது. இந்த சங்கடஹர சதுர்த்திக்கு பின் சொல்லப்படும் பிள்ளையார் வழிபாட்டை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டம் தண்ணீரில் கரைத்த உப்பு போல அப்படியே கரைந்து போகும். நம்பிக்கையோடு வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு.

சங்கடஹர சதுர்த்தி அன்று காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு விரதத்தை தொடங்குங்கள். உங்கள் உடல் சூழ்நிலைக்கு ஏற்றது போல விரதத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம். சங்கடஹர சதுர்த்திக்கு மாலை நேரம் தான் சிறப்பு. மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்துக்கு அருகம்புல்லால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்சமாக, ஒரு அரை கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். இதை அம்மி கல்லில் வைத்து நசுக்கினாலும் சரி, சிறிய உரலில்(இஞ்சி பூண்டு நசுக்கும் ஊழல்) போட்டு இடித்துக் கொண்டாலும் சரி, கல் உப்பு தூளாக மாறட்டும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சமாக அக்த்தர் ஜவ்வாது போன்ற வாசனை திரவியத்தை ஊற்றி, அந்த உப்பை கெட்டியாக செய்யுங்கள். ஓரளவுக்கு அது பிடிக்க வரும். மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போலவே இந்த உப்பை பிள்ளையாராக பிடித்துக் கொள்ளுங்கள். உப்பு பிள்ளையார்.

ஒரு பித்தளை தட்டின் மேலோ அல்லது செம்பு தட்டின் மேலோ ஒரு வெற்றிலையை வைத்து இந்த உப்பு பிள்ளையாரை வைக்க வேண்டும். எந்த தட்டுமே இல்லை என்றால் பாக்கு மட்டை தட்டில் கூட வெற்றிலையின் மேல் இந்த பிள்ளையாரை வைத்து பிள்ளையாருக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து பிள்ளையாருக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்தப் பிள்ளையாரை செய்யும்போது உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே பிள்ளையாரை பிடிங்க. பிள்ளையாருக்கு முன்பு அமர்ந்து ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். (அருகம்புல்லால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.) உங்களுக்கு வேறு ஏதாவது விநாயகரின் மந்திரம் தெரிந்தாலும் சொல்லலாம் தவறு கிடையாது. இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் சீக்கிரம் சரியாக வேண்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் ஆழ் மனதில் நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிள்ளையாருக்கு நிவேதனமாக உங்களால் முடிந்த இரண்டு கற்கண்டுகளை வைத்தாலும் சரிதான். வழிபாட்டை முடித்துவிட்டு இந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

இந்த உப்பு பிள்ளையார் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு நாள் இரவு இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு கஷ்டங்கள் கரைந்து போக, ஒரு சிறிய கிண்ணத்தில் நல்ல தண்ணீரை ஒரு சொம்பில் எடுத்து, பிடித்து வைத்திருக்கும் பிள்ளையாரை அந்த தண்ணீரில் கரையுங்கள். உங்கள் கடன் கஷ்டம் அனைத்தும் கரைந்து போய்விட்டது என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இந்த சின்ன பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும். இந்த வழிபாட்டை இந்த சங்கடஹர சதுர்த்தி இல்லாமல், அடுத்து வரக்கூடிய வேறு சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -