சுலபமான முறையில் உளுத்தம் பருப்பு லட்டு செய்ய இந்த 5 பொருட்கள் போதும்! இதை சாப்பிட்டால், முதுகுவலி என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

- Advertisement -

உளுத்தம் பருப்பை வைத்து சுவையான லட்டு செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக இந்த உளுந்து லட்டுவை, பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சிறு வயதிலேயே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, முதுகு வலியும், இடுப்பு வலியும், வயிறு வலியும் அதிகமாகவே இருக்கிறது. உடலுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய பாட்டிமார்கள் உளுத்தம் பருப்பை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். சரி. உளுந்து லட்டு எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.

ulunthu

உளுந்து லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 ஆழாக்கு, சர்க்கரை – 1 ஆழாக்கு, ஏலக்காய் – 2, முந்திரி – 10 சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ளவும், நெய் – 50 ml.

- Advertisement -

முதலில் ஒரு கடாயில் உளுந்தம் பருப்பை போட்டு சிவப்பு நிறமாக வறுக்க வேண்டும். மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு உளுத்தம்பருப்பு சிவக்க வேண்டும். எல்லா உளுந்தும் சீராக ஒரே நிறத்தில் சிவக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இது சிவப்பதற்கு 15 நிமிடங்கள் வரை எடுக்கும்.

ulunthu

அதன் பின்பு, வறுத்த உளுந்தை உடனே, வேறு பாத்திரத்தில் மாற்றி, நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு, 2 ஏலக்காய்களையும் சேர்த்து, நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நறநறவென்று இருக்கக் கூடாது. உளுந்து நறநறவென்று இருந்தால் லட்டு, சரியாக வராது. அதன் பின்பாக ஓரு ஆழாக்கு சர்க்கரையைப் போட்டு மிக்ஸியில் ஒரு ஓட்டு, ஓட்டி கொள்ளுங்கள். ஓரளவிற்கு, சர்க்கரை நறநறவென்று இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

மிக்ஸியில் இருந்து அரைத்த உளுந்த மாவை ஒரு தாம்பாளத் தட்டில் கொட்டி, உடனே நீங்கள் அரைத்து வைத்திருக்கும் சர்க்கரையும் இந்த மாவில் கொட்டி கலந்து விட வேண்டும். ஏனென்றால், மிக்ஸியில் உளுந்து மாவை அரைக்கும் போது அந்த மாவானது லேசாக சூடு ஆகும்? அந்த சூட்டிலேயே சர்க்கரையைக் கொட்டி கலக்கும் போது, சர்க்கரை நரநரவென்று இருந்தாலும், அது கரைந்து, பக்குவத்திற்கு வந்துவிடும்.

urad-dal-luddu

அதன் பின்பு உடனே அடுப்பில் சிறிய தாளிப்பு வைத்து, அதில் 50 கிராம் நெய் விட்டு, பொடியாக கிள்ளிய, முந்திரி பருப்பை போட்டு லேசாக சிவந்ததும், நெய்யையும், முந்திரிப் பருப்பையும், இந்தக் கலவையில் கொட்டி, முதலில் கரண்டியால் கலந்து விட்டு, அதன் பின்பு கைகளால் எடுத்து, கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள். நெய்யை ஊற்றி கையை விட்டு விடாதீர்கள். சுட்டுவிடும்.

- Advertisement -

கொஞ்சம் உருண்டை பிடிப்பதற்கு கஷ்டமாக தான் இருக்கும். இருப்பினும், அந்த சூடு ஆறுவதற்கு முன்பு வேகவேகமாக உருண்டை பிடித்து விட்டீர்கள் என்றால் சுவையான உளுந்து உருண்டை தயார். உருண்டை பிடிக்க, முடியவில்லை என்றால், தூள் ஆகவே கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு சாப்பிட்டு விடுங்கள்.

urad-dal-laddu

இதை செய்யும் போதே, இதன் மணம் அடுத்த வீட்டு வரை வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. காய்ந்த டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோய் இல்லாதவர்கள், இந்த உளுந்து லட்டுவை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

கட்டாயம் உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு இந்த லட்டுவை செய்து கொடுங்கள். பிற்காலத்தில் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தவறு ஒன்றுமில்லை. பெரியவர்களும் சாப்பிடலாம். எதற்காக பெண் குழந்தைகளுக்கு என்றால், அவர்களுடைய எலும்பிற்கு வலு அதிகமாக தேவைப்படுகிறது. இந்த காலத்தில் பெண் குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த குறிப்பு சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
மிச்சமான சாதத்தில் இந்த, புதுவிதமான ரொட்டி செஞ்சி பாருங்க! மீதமான சாப்பாட்டை இதில் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Urad dal laddu in Tamil. Urad dal laddu benefits. Ulundu laddu recipe in Tamil. Ulundu laddu recipe.

- Advertisement -