உருளைக்கிழங்கு கறி வறுவல் இப்படி மட்டும் வறுத்து வச்சுட்டா போதும், தினமுமே தயிர் சாதம் கொடுத்தா கூட சாப்பிடு வாங்க. கறி சுவையில் சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல்.

- Advertisement -

உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு தான். காய்கறிகளில் எதை சாப்பிடவில்லை என்றாலும் இந்த உருளைக்கிழங்கை எல்லா குழந்தைகளுமே விரும்பி சாப்பிடுவார்கள். அதையும் இதே போல கறிவறுவல் செய்து கொடுத்தால் போதும் வேறு எதையுமே கேட்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி வெறும் தயிர் சாதம், ரசம் சாதம் செய்து கொடுத்தால் கூட இந்த உருளைக்கிழங்கு கறி வருவல் இருந்தால் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த சுவையான உருளைக்கிழங்கு கறி வறுவல் ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த உருளைக்கிழங்கு கறி வருவல் செய்வதற்கு முதலில் ஐந்து உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக அலசி மேல் தோல் சீவிய பிறகு வட்டமாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கும் போது மிகவும் மெல்லிய துண்டுகளாக போடக் கூடாது. உருளைக்கிழங்கு மெலிதாக இருந்தால் கடாயில் போட்டு பிரட்டும் போது உடைந்து விடும். எனவே ஓரளவுக்கு கொஞ்சம் தடிமனாக போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் கொஞ்சம் அதிகமாக இருந்தால் தான் உருளைக்கிழங்கு வறுக்க சரியாக இருக்கும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்த பிறகு இந்த உருளைக்கிழங்கை தண்ணீரிலிருந்து எடுத்து வடித்து ஈரம் இல்லாமல் இந்த கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு முறை நன்றாக கலந்து இரண்டு நிமிடம் மூடி போட்டு அப்படியே வேக விடுங்கள். இதற்குள்ளாக உருளைக்கிழங்கு பாதிக்கு மேல் வெந்து விடும்.

அதன் பிறகு கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள் இவையெல்லாம் சேர்த்து லேசாக கலந்து விட்டு மறுபடியும் மூடி போட்டு இரண்டு நிமிடம் விடுங்கள். மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் ஊறி விடும்.

- Advertisement -

இதன் பிறகு மூடியை திறந்து விட்டு உருளைக்கிழங்கை ஒரு முறை பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மேல் கொஞ்சம் சோம்புத்தூளை சேர்த்துக் கொண்டால் வாசம் இன்னும் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் இந்த கிரேவியை செய்து சாப்பிடுங்க. இன்னைக்கு கறி குழம்பு சாப்பிடலையே என்ற கவலை நிச்சயம் உங்களுக்கு இருக்காது.

அவ்வளவு தான் உருளைக்கிழங்கு கறி வருவல் தயாராகி விட்டது. இது உங்களுக்கு ரோஸ்ட் ஆக வேண்டுமென்றால், இன்னும் சிறிது நேரம் அடுப்பிலே வைத்து லேசாக கிளறி விட்டால் உருளைக்கிழங்கு நல்ல முறுகலாக வரும். உருளைக்கிழங்கு கறி வறுவல் சூப்பராக தயாராகி விட்டது.

- Advertisement -