10 நிமிடத்தில் இந்த கிரேவியை செய்து சாப்பிடுங்க. இன்னைக்கு கறி குழம்பு சாப்பிடலையே என்ற கவலை நிச்சயம் உங்களுக்கு இருக்காது.

- Advertisement -

அசைவம் சாப்பிட முடியாத நாட்களில், அசைவ குழம்பு சுவையில் ஒரு கிரேவி வைத்து சாப்பிட்டால் நிச்சயமாக எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அல்லவா. அதற்காகத்தான் இன்று உருளைக்கிழங்கு சேர்த்த மேன்மைக்கர் கிரேவி ரெசிபியை பார்க்க போகின்றோம். ரொம்ப ரொம்ப சுலபமாக ஈசியாக அரை மணி நேரத்தில் இந்த கிரேவியை செய்து முடித்து விடலாம். சப்பாத்தி, தோசை, இட்லி, பரோட்டா, நாண், இவைகளுக்கு இந்த சைட் டிஷ் சூப்பராக இருக்கும். நேரத்தை கடக்காமல் அந்த அருமையான மீல்மேக்கர் கிரேவியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 100 கிராம் அளவு மீல் மேக்கரை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு, கொஞ்சமாக உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, தட்டு போட்டு மூடி விடுங்கள். சுடுதண்ணீரிலேயே மீல் மேக்கர் வெந்ததும், அதை வடிகட்டி அந்த மீல்மேக்கரை மீண்டும் சுத்தமான தண்ணீரில் ஒரு முறை கழுவி, தண்ணீரையெல்லாம் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 1, பிரியாணி இலை – 1, நட்சத்திர சோம்பு – 1, போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், போட்டு வதக்க வேண்டும். பிறகு 2 தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, அரைத்து இதில் ஊற்றி வதக்கத் தொடங்குங்கள். தக்காளி பழம் பச்சை வாடை நீங்கியதும், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இதை கருகாமல் வதக்கி கொள்ளுங்கள். (இந்த குருமாவுக்கு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் எல்லாம் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும்.)

தோல் சீவி க்யூப் வடிவத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கு – 2 இந்த மசாலா பொருட்களோடு போட்டு ஒரு நிமிடம் வதக்கி, உருளைக்கிழங்கு வேகும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். ஐந்து நிமிடத்தில் உருளைக்கிழங்கு வெந்து அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் சுண்டி வரும். அப்போது தயாராக வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மீள்மேக்கரை இதோடு போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மசாலா எல்லாம் மீள்மேக்கரோடு படும்படி கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை கொஞ்சம் தாராளமாக ஊற்ற வேண்டும். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் மீள் மேக்கர் கொஞ்சம் உறிஞ்சும். ஆறிய பிறகும் இந்த குழம்பு திக்காகும். இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு மூடியை போட்டு இதை கொதிக்க வையுங்கள். இதற்கு சூப்பரான ஒரு அரவை தயார் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டுக்கு திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா டென்ஷனே ஆகாம, சட்டுனு ஒரு கப் ரவையை எடுத்து பத்தே நிமிஷத்துல சூப்பரான இந்த போண்டா செய்து குடுத்துடுங்க. அப்புறம் உங்களுக்கு ஒரே பாராட்டு மழை தான் போங்க.

தேங்காய் – 2 கைப்பிடி அளவு, பொட்டுக்கடை – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல நைஸாக அரைத்து, கொதிக்கின்ற குழம்பில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழைகளை தூவி, மிதமான தீயில் குருமாவை கொதிக்க வைக்க வேண்டும். அரவையை ஊற்றிய உடனே 1 ஸ்பூன் கரம் மசாலாவை இதில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு மூடியை போட்டு விடுங்கள். மேலே லேசாக எண்ணெய் பிரிந்து வரும்போது, அடுப்பை அணைத்து விட்டால் கமகம வாசத்தோடு சூப்பரான உருளைக்கிழங்கு மீல் மேக்கர் கிரேவி தயார். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -