பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பூஜை அறை குறிப்புகள்

poojai
- Advertisement -

வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் முதலில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு இடங்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்பது நிச்சயம் இருக்கும். அதேபோல் சொந்த வீடாக இருந்தால் பூஜை செய்வதற்கு தனியாக பூஜை அறையும் இருக்கும். ஆனால் வாடகை வீடாக இருக்கும் பொழுது ஒரு சில வீடுகளில் பூஜை அறை என்பது தனியாக இருக்காது. இருக்கும் இடத்திலேயே பூஜை படங்களை வைத்து இறைவனை வழிபட வேண்டி இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் பூஜை செய்யும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பூஜை செய்வதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ஒரு சிலருக்கு எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும்? என்னென்ன பொருட்களை வைக்கக் கூடாது? என்றெல்லாம் பல சந்தேகங்கள் இருக்கிறது. அதற்கான தெளிவான குறிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு: 1
பூஜை அறையில் எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றி வைக்கலாம். ஆனால் தவறாமல் ஒரு மண் அகல் விளக்கில் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது குடும்பத்திற்க்கு நன்மையைக் கொடுக்கிறது. அதேபோல் அகல் விளக்குகளில் தீபமேற்றி வைத்து அதன் பிறகுதான் மற்ற விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 2
அதேபோல் அகல் விளக்கில் தீபம் ஏற்றி விட்டு, அதில் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் வசதி மற்றும் தசாங்கம் இவற்றை பொருத்திக் கொள்ளலாம். ஆனால் காமாட்சி விளக்கிலோ, கஜலட்சுமி விளக்கிலோ இவ்வாறு ஊதுபத்திகளை பொருத்தக்கூடாது.

குறிப்பு: 3
பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும். அதில் காம்பு பகுதி, நுனிபகுதி சரியாக இருக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கின் காம்புபகுதி சுவாமியின் வலது புறமும், நுனிப்பகுதி இடது புறமுமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 4
பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு அதில் மூன்று கண் உள்ள பகுதியை சுவாமியின் வலது புறமும், தேங்காயின் இன்னொரு பகுதியை சுவாமியின் இலது புறமும் வைத்து விட வேண்டும்.

குறிப்பு: 5
கோவிலில் அர்ச்சனை செய்து உடைக்கப்படும் தேங்காயின் ஒரு பகுதியை பூசாரியிடம் கொடுக்கும் பொழுது, மூன்று கண் இருக்கும் பகுதியை கொடுத்துவிடக் கூடாது. மூன்று கண் உள்ள தேங்காய் பகுதியை வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது தான் பூஜை செய்த முழுபலனும் கிடைக்கிறது. எனவே மற்ற பாதியை பூசாரியிடம் கொடுத்து விட வேண்டும்.

குறிப்பு: 6
ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும். ஆனால் ஒரு சிலருக்கு எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அவர்கள் மணி பிளாண்ட் வைத்திருக்கும் பிளாஸ்டிக் தொட்டியை மாற்றி விட்டு, அதனை ஒரு மண் தொட்டி அல்லது மண் பானையில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை 6 இலிருந்து 7 மணிக்குள் தண்ணீருடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்து வரும் பொழுது பண வரவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

- Advertisement -