ஆண்களின் முகம் மினுமினுன்னு பளிச்சிடுவதற்கு அட்டகாசமான 5 குறிப்புகள்! இது தெரிஞ்சா இனி நீங்களும் ஆகலாம் ஹீரோ!

men-face-banana-pack
- Advertisement -

அழகு குறிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு. ஒரு ஆண் தன்னை தானே அழகாக காட்டிக் கொள்வதற்கு அவ்வளவாக மெனக்கெடுவது இல்லை. சாதாரண முறையில் தன்னை மெருகேற்றிக் கொள்ள நினைக்கும் ஆண்களுக்கு, சரும அழகை பேணிக்காப்பதில் அவ்வளவு நாட்டம் இல்லாமல் போவது எதனால்? ஆண்களுடைய சருமத்திற்கு ஏற்ற அட்டகாசமான இந்த 5 குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள், நிச்சயம் நீங்களும் மினுமினுப்பாக ஹீரோ போல பளிச்சென இருப்பீர்கள்!

குறிப்பு 1:
பெண்களை விட ஆண்கள் வெயிலில் அதிகம் சுற்றி கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுடைய சருமம் இயல்பாகவே விரைவில் கறுத்து போய்விடும். சூரிய ஒளியில் அதிகம் பயணிக்கும் ஆண்களுக்கு எண்ணற்ற நுண்கிருமிகள் முகத்தில் ஒட்டிக் கொண்டு முகப் பொலிவை கெடுத்துக் கொண்டிருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு அரை வாழைப்பழத்தை நன்கு குழைவாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகம் முழுவதும் நன்கு பரபரவென அழுத்தம் கொடுக்காமல் லேசாகத் தேயுங்கள். 10 நிமிடம் இவ்வாறு மசாஜ் செய்த பின் வெது வெதுப்பாக இருக்கும் சுடு தண்ணீரில் முகத்தை கழுவிப் பாருங்கள், முகத்தில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீங்கி பொலிவுறும்.

- Advertisement -

குறிப்பு 2:
வறண்ட சருமம் உடையவர்களுக்கு நல்ல ஈரப்பதம் தொடர்ந்து நீடித்து இருக்க, தினமும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகம் முழுவதும் தடவி காய வைத்து அப்படியே இரவு தூங்கி விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து முகம் கழுவி பார்த்தால் வறண்ட சருமம் ஈரப்பதத்துடன் புத்துணர்வாக இருக்கும்.

குறிப்பு 3:
ஆண்களுக்கு பொதுவாக அதிக கரும்புள்ளிகள் மிகப் பெரிய பிரச்சனையாக சில சமயங்களில் தோன்றி விடுவது உண்டு. இந்த கரும்புள்ளிகளை எளிதாக அகற்றுவதற்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயுடன் மஞ்சள், பால், பன்னீர், வேப்பங்கொழுந்து ஆகியவை தலா அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் தடவி உலரவிட்டு முகத்தைக் கழுவிப் பாருங்கள், கரும்புள்ளிகள் எளிதாக மறையும். 1 வாரம் வரை தொடர்ந்து இதை செய்து பாருங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
வெயிலில் அலைந்து முகம், கை, கால் மட்டும் கறுத்துப் போய் இருக்கும் ஆண்களுக்கு இந்த மசாஜ் செய்யும் பொழுது நல்ல பலன் தெரியும். ஆரஞ்சு பழம் சாப்பிட்டு விட்டு தூக்கி எறியும் அந்த தோலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதனுடன் பால் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கொண்டு மசாஜ் செய்தால் முகம் பள பளவென மின்ன ஆரம்பிக்கும். முகத் துவாரங்களுக்குள் இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி முகத்தை பிரகாசிக்க செய்யும்.

குறிப்பு 5:
முகப் பருக்கள் இருக்கும் ஆண்களுக்கு பெண்களுக்கு சொல்லப்படும் குறிப்புகளை விட இந்த குறிப்பு பயன்படுத்திப் பார்த்தால் நல்ல ஒரு நிவாரணம் தெரியும். முகம் முழுவதும் தழும்புகளுடன் பருக்களும் சேர்ந்து வாட்டி வதைத்து கொண்டிருந்தால் அதற்கு எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையும் ஒரு காரணமாகும். எனவே 2 டீஸ்பூன் அளவிற்கு முல்தானி மட்டியுடன், ஒரு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் பன்னீர், அரை ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் முகம் முழுவதும் பேக் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலம்பி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல ஒரு மாற்றம் தெரியும்.

- Advertisement -