உங்க வீட்டு குக்கர் நீண்ட நாள் புதியது போலவே இருக்கனுமா? அப்போ இந்த குறிப்புகளை சரியாக பின்பற்றுங்கள்

cooker
- Advertisement -

100% அனைத்து வீடுகளிலும் சமையலுக்காக குக்கரை பயன்படுத்துகிறோம். சாதம் வடிக்க, பருப்பு வேக வைக்க, பிரியாணி செய்ய, கறி குழம்பு வைக்க, கூட்டு சமைக்க இவ்வாறு பல வகையான உணவுகளை எளிமையாகவும், சீக்கிரமாகவும் செய்வதற்கு குக்கர் பயன்படுகிறது. இவ்வாறு தினமும் நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் குக்கர் ஏதேனும் ஒரு நாள் பழுதடைந்து விட்டால் அன்றைக்கான சமையல் வேலைகள் செய் அதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். நேரமும் அதிகமாக செலவாகும். இதற்காக குக்கர் சீக்கிரத்தில் பழுதடையாமல் புதியது போலவே இருக்க இந்த குறிப்புகளை மட்டும் முறையாக பின்பற்றினால் போதும். வாருங்கள் அத்தகைய குறிப்புகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

rice-cooker

குக்கர் உபயோகிக்கும் முறை:1
குக்கரில் சாதம் வடிக்க அரிசி கழுவி வைக்கும் போது அதன் அளவில் கவனமாக இருக்க வேண்டும். அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வரும் அளவு குக்கர் கைப்பிடிக்கு மேலே வரக்கூடாது. அதாவது கைப்பிடி ஸ்க்ரு இருக்கும் இடத்திற்கு சற்று கீழே இறுக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதம் நன்றாக வெந்து வரும். அதுமட்டுமல்லாமல் குக்கரில் இருக்கும் தண்ணீர் வெளியே வராமலும் இருக்கும். ஒவ்வொரு முறையும் குக்கரை பயன்படுத்தும் பொழுது இதனை சரியாக கவனித்து செய்தால் போதும். குக்கர் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

- Advertisement -

முறை: 2
அதிகப்படியான வீடுகளில் குக்கர் கைப்பிடி இல்லாமல்தான் இருக்கும். இதற்கு காரணம் அடுப்பின் தீ குக்கரின் கைப்பிடி மீது அதிகமாக விழுவதால் கைப்பிடி எளிதில் வலுவிழந்து சீக்கிரத்தில் கழன்று விடுகிறது. இதனை தவிர்க்க குக்கரை அடுப்பின் மீது வைக்கும் போது அடுப்பின் தீயை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சிறிய குக்கரை சிறிய பர்னர் இருக்கும் அடுப்பின் மீதும், பெரிய குக்கரை பெரிய பர்னர் இருக்கும் அடுப்பின் மீதும் தான் வைக்க வேண்டும். அப்போதுதான் அடுப்பின் தீ அதிகமாக கைப்பிடியில் படாமல் இருக்கும். இதனை கவனமாக பின்பற்றினாலே குக்கரின் கைப்பிடி சீக்கிரத்தில் கழண்டு விழாமல் இருக்கும்.

cooker

முறை: 3
என்னதான் கவனமாக பயன்படுத்தினாலும் குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஸ்க்ரு வலுவிழந்து நாளடைவில் கைப்பிடி ஆட ஆரம்பித்து விடும். இதனை சரிசெய்ய ஸ்க்ருவை முழுவதுமாக கழற்றி அதன் மீது சிறிதளவு நகப்பூச்சு (நெயில் பாலிஷ்) தடவி அதன் பிறகு ஸ்க்ருவை போட்டுவிட்டால் கைப்பிடி ஆடாமல் அழுத்தமாக இருக்கும்.

- Advertisement -

முறை 4:
குக்கரில் பயன்படுத்தும் கேஸ் கட்டரை சமையல் முடித்த உடனே தனியாக எடுத்து நன்றாக கழுவி வைக்க வேண்டும். இவ்வாறு பயன்படுத்தியும் கேஸ் கட்டர் இருக்குமாக இல்லையென்றால் அதனை ஒரு நாள் முழுவதும் பிரிட்ஜில் வைத்து விட்டு, மறுநாள் எடுத்து பயன்படுத்தினால் குக்கரின் கேஸ் கட்டர் இறுக்கமாக இருக்கும்.

presure-cooker

முறை: 5
குக்கரில் சமைக்கும் பொருட்கள் அனைத்தையும் போட்டு மூடி வைத்ததும் உடனே குக்கர் விசில் போட கூடாது. குக்கரை அடுப்பில் வைத்து அதில் இருந்து காற்று வெளியேற ஆரம்பிக்கும் போதுதான் குக்கரின் மீது விசிலை போட வேண்டும். அப்பொழுதுதான் குக்கர் வாசரினுள் எந்தவித அடைப்புகளும் ஏற்படாமல் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.

cooker

முறை: 6
10 நாட்களுக்கு ஒரு முறையாவது குக்கர் விசில் முழுவதையும் தனித்தனியாக கழற்றி பாத்திரம் துலக்கும் லிக்விட் பயன்படுத்தி நன்றாக கழுவி வைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குக்கர் இருந்தாலும் ஒவ்வொரு குக்கருக்கும் அவற்றுக்கென்றிருக்கும்அ விசிலை மட்டும்தான் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -