இட்லிக்கு புழுங்கலரிசி சேர்ப்பீர்களா? டீ பாத்திரம் தேய்க்க சோம்பேறித்தனமாக இருக்கிறதா? வெள்ளி பாத்திரங்கள் பளபளக்க இந்த பேப்பர் போதுமா?

mop-silver
- Advertisement -

காலையில் எழுந்து டீ போடுவது முதல் இரவு தூங்கச் செல்லும் பொழுது இட்லிக்கு மாவு அரைத்து கரைத்து வைப்பது வரை அன்றாடம் ஒரு இல்லத்தரசியின் வேலை மிகவும் கடினமானதாக இருக்கும். அவற்றை ரொம்பவே சுலபமாக கையாளக்கூடிய எளிதான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். இல்லத்தரசிகளுக்கு செய்யும் வேலையை சுலபமாக்கி தரும் முக்கியமான இந்த 6 குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

குறிப்பு 1:
டீ போடும் பொழுது எப்பொழுதும் முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தேவையான அளவிற்கு டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அதன் பின் சூடான பால் சேர்த்தால் டீ திக்காக, ருசியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பாத்திரமும் அடிப்பிடிக்காது. எனவே டீ பாத்திரத்தை தேய்க்க வேண்டுமே என்கிற சிரமமும் இல்லை.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் அல்லது வெள்ளி நகைகள் எப்போதும் புதுசு போல பளபளவென மின்னுவதற்கு, அந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் அல்லது மாதம் ஒரு முறையாவது கொஞ்சம் கொதிக்க வைத்த தண்ணீரில் அலுமினியம் ஃபாயில் பேப்பர் துண்டுகளை கத்தரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் வெள்ளி பாத்திரங்கள் அல்லது உங்களுடைய நகைகளை மூழ்கும்படி போடுங்கள். 10 நிமிடம் கழித்து அலுமினிய ஃபாயில் பேப்பர் துண்டுகளை வைத்தே பாத்திரத்தை தேய்த்துப் பாருங்கள் பளபளவென புதியது போல வெள்ளி பொருட்கள் மின்னும்.

குறிப்பு 3:
வீட்டில் வெண்ணெயை உருக்கும் போது.. அதை காய்ச்சும் பொழுது கடைசியாக இறக்கி கொஞ்சம் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது உங்கள் நெய் நல்ல வாசமாகவும் இருக்கும், கசக்கக் கூட செய்யாது.

- Advertisement -

குறிப்பு 4:
பழைய திக்கான காட்டன் துணிகள், பெட்ஷீட், நைட்டி, தலையணைக்கு போடும் உறை போன்றவற்றை ஒரு அடிக்கு நீளமான கைக்குட்டை போல போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெட்டிய பாகத்தின் மேல் பகுதியில் 2 அங்குலத்திற்கு துணியை விட்டுவிட்டு கீழிருந்து அருகருகே நீள வாக்கில் கத்தரித்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு நீளமான குச்சியில் அதை சுற்றி துணியால் கட்டி விட்டால் போதும். எளிய அளவிலான வீட்டை துடைக்கும் மாப் தயார்! இதை பயன்படுத்தி வாகனங்கள், ஜன்னல் கம்பிகள் போன்றவற்றின் மீது இருக்கும் தூசுகளை கூற கூட சுலபமாக அகற்றிக் கொள்ளலாம்.

குறிப்பு 5:
சாப்பிடும் உணவில் காரம் அதிகமாகி கண்களில் தண்ணீர் வரும் அளவிற்கு காரத்தை உணர்ந்தால் கொஞ்சம் தேன் சாப்பிட்டு பின்னர் நாக்கு, உதடு ஆகிய இடங்களில் எல்லாம் தேன் தடவி விட்டால் போதும், நொடியில் காரம் மறைந்து சரியாகிவிடும்.

குறிப்பு 6:
மிக்ஸியில் இட்லி மாவு அரைப்பவர்கள், புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்தால் அதை முன்தினம் இரவே ஊற வைத்து அரைப்பது தான் நல்லது. அப்பொழுது தான் வேகமாகவும், நைஸ் ஆகவும் அரைபடும். இதனால் மிக்ஸி விரைவில் சூடாகாமல் நீண்ட நாள் உழைக்கும்.

- Advertisement -