இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சா போதும் உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல. இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான வீட்டுக் குறிப்புகள்.

kitchen tips
- Advertisement -

வீட்டு வேலைகளை பொருத்த வரையில் நாள் முழுவதும் செய்தால் கூட முடியாமல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வேலைகளை சுலபமாக முடிக்க சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படியான சில குறிப்புகளை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

புதிதாக வாங்கும் எந்த பொருளிலும் ஸ்டிக்கர் ஒட்டி தான் வரும். பெரிய பொருட்கள் என்றால் அடுப்பு தனலில் காட்டி எடுத்து விடலாம். சின்ன சின்ன பொருட்களை (ஸ்பூன், கிண்ணம்) அப்படி செய்ய முடியாது. அதற்கு இட்லி வேக வைத்து எடுத்த பிறகு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக இருக்கும். அதில் மீண்டும் இட்லி தட்டை வைத்து அதன் மேல் இந்த சின்ன பொருட்களை வைத்து மூடி ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு எடுத்தால் ஸ்டிக்கர் எல்லாம் சுலபமாக வந்து விடும்.

- Advertisement -

இதிலே மீதமிருக்கும் அந்த சுடு தண்ணீரை கூட வீணாக்காமல், சிங்கில் கொஞ்சமாக ஹார்பிக் சேர்த்து அதன் பிறகு அந்த தண்ணீரை ஊற்றி விட்டால் சிங்கில் இருக்கும் அடைப்பு முழுவதுமாக நீங்கி விடும். எப்படியும் நாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது இட்லி செய்து விடுவோம். அப்பொழுது சூடு படுத்திய தண்ணீரை வீணாக சிங்கில் ஊற்றுவோம். அப்படி ஊற்றும் போது கொஞ்சம் ஹார்பிக் சேர்த்து ஊற்றுங்கள்.சிங் சுத்தம் செய்யும் வேலை சுலபமாக முடிந்து விடும்.

அதே போல் வீட்டை பெருக்க நாம் தென்னந் துடைப்பம் பயன்படுத்துவோம். அதில் எப்போதும் குச்சிகள் உருவி கீழே கொட்டிக் கொண்டே இருக்கும். அது மட்டுமின்றி கயிறு வைத்து எப்படி கட்டினாலும் அது தளர்வாகி விடும். இனி அப்படி ஆகாமல் இருக்க நாம் தலைக்கு பயன்படுத்தும் ரப்பர் பேண்டை துடைப்பத்தில் இரண்டு மூன்று சுற்றுகள் சுற்று இறுக்கமாக போட்டு விட்டால் தொடப்பமும் தளர்வாகாது குச்சிகளும் கழண்டு விழாது.

- Advertisement -

சப்பாத்தி பூரிகளுக்கு மாவு திரட்டி வைத்து சுட்டு எடுப்பதற்குள் முதலில் திரட்டி வைத்த மாவு வறட்டி போல ஆகிவிடும். அதுமட்டுமின்றி சப்பாத்தி போட்டு எடுக்கும் பொழுது உப்பலாக வராது. இனி நீங்கள மாவு திரட்டும் போது பக்கத்தில் பழைய நோட் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு பேப்பருக்கு இடையிலும் திரட்டிய சப்பாத்தி அல்லது பூரியை போட்டு வைத்து விடுங்கள். நீங்கள் எடுத்து சுடும் வரையில் அப்படியே இருக்கும். மாவும் ஒட்டாமல் நன்றாக வரும். இதற்கு எழுதிய நோட்டை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது.

வீட்டில் இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது அடுத்த நாள் ஊற்ற நாம் கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து வெளியே வைத்து விடுவோம். சில நேரங்களில் மாவு பொங்கி ஊற்றி நம் வேலையை இருமடங்காக்கி விடும். இனி அப்படியே ஆகாமல் இருக்க மாவை கரைத்து வைக்கும் போது, அதன் உள்ளே நல்ல ஒரு நீளமான டம்ளரை தலைகீழாக உள்ளே சொருகி ஒரு சுற்று சுற்றி விட்டு அப்படியே வைத்து விடுங்கள். இப்படி வைக்கும் போது மாவு புளித்து பொங்கி ஊற்றாமல் இருக்கும்.

- Advertisement -

பாத்திரம் தேய்க்கும் போது பாத்திரத்தில் இருக்கும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து சிங்கிள் அடைப்பு ஏற்பட்டு விடும். இதற்கு உங்கள் வீட்டில் பழைய டீ வடிகட்டி இருந்தால் அதை சிங்கிள் தண்ணீர் போகும் இடத்தில் வைத்து விடுங்கள். இதன் பிறகு பாத்திரம் தேய்க்கும் போது அனைத்து கசடுகளும் அந்த வடிகட்டியில் தங்கி விடும். அதை அப்புறப்படுத்தவும் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி நீங்கள் ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கிய பேன்சி நகைகளை வாழ்நாள் முழுவதும் புதிது போலவே வைத்திருக்க சூப்பரான ஐடியா இருக்கு வாங்க. அதை என்னன்னு தெரிஞ்சுகிட்டு பழைய நகையே புதுசு போல போட்டு அசத்துங்க

இந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டு வேலை செய்யும் போது இவையெல்லாம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -