இனி வாஷிங் மெஷினில் துவைச்ச துணி கூட கையில துவைச்ச மாதிரி பளிச்சுன்னு இருக்க இதை மட்டும் சேர்த்தா போதும். இனி வெள்ளை துணியை கூட கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

lady washing machine neem
- Advertisement -

வேலைக்கு செல்லும் பெண்களாவது காலையில் சிறிது நேரம் வீட்டு வேலை முடித்து விட்டு வெளியில் சென்று வேறு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் என்று காலை முதல் மாலை வரை வேலை செய்து கொண்டே இருப்பார்கள். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள சின்ன சின்ன தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அத்தனை நேரம் நாம் வீட்டு வேலைக்காக நம்முடைய நேரத்தை செலவு செய்ய வேண்டியது இல்லை. வாங்க அது என்ன குறிப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் தினமும் நம்முடைய உணவில் தயிர், மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே போல தயிரும் இந்த வெயில் காலத்தில் சீக்கிரம் புளித்து சாப்பிட முடியாத அளவிற்கு ஆகி விடும். இனி நீங்கள் தயிர் உறை ஊற்றும் போதே ஒரு சின்ன துண்டு தேங்காய் சேர்த்து விட்டால் பத்து நாட்கள் ஆனால் கூட தயிர் அதிகமாக புளிக்காமல் இருக்கும்.

- Advertisement -

அதே போல வீட்டில் இருக்கும் கண்ணாடி, பாத்ரூம் கண்ணாடி போன்றவற்றை எப்படி சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே திட்டு திட்டாக படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். அதற்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த டூத் பேஸ்ட்டை சிறிதளவு எடுத்து கண்ணாடியில் தேய்த்து அதன் பிறகு ஒரு காட்டன் துணி வைத்து துடைத்து விட்டால் கண்ணாடி பளிச் சென்று மாறி விடும்.

மழைக்காலம் வெயில் காலம் என எந்த காலமானாலும் இந்த கொசு தொல்லை மட்டும் குறையவே குறையாது. அதற்கு சிறிதளவு வேப்பிலையும், இரண்டு பல் பூண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் நைசாக அரைத்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கால் டீஸ்பூன் கடுகையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பதில் கடுகு எண்ணெய் இருந்தால் அதையே சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்த பிறகு அலுமினியும் மூடி போட்ட டானிக் பாட்டிலில் இதை ஊற்றி மூடியில் ஒரு துளை போட்டு அதில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் திரியை சேர்த்து எரிய விட்டால், இந்த வாடைக்கு வீட்டில் ஒரு கொசு கூட வராது. அது மட்டும் இன்றி வீடும் நல்ல நறுமணத்தும் இருக்கும். இது நீண்ட நாட்களுக்கு பயன்படும். இதனால் அதிக விலை கொடுத்து ரசாயனம் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்தி தேவையில்லை.

வாஷிங் மெஷினில் துவைத்தாலும் கூட சில நேரங்களில் எவ்வளவு நேரம் துவைத்தாலும் ஒரு சில துணிகளில் அழுக்கு போகவே போகாது. அதே நேரத்தில் துணிகளும் வாஷிங் மெஷினில் அடிக்கடி போடும் போது சீக்கிரத்தில் நிறம் மாறி பழைய துணி போல மாறி விடும். இது போல ஆகாமல் இருக்க நீங்கள் வாஷிங் மெஷினில் ஊற்றும் லிக்விட் உடன் ஒரு பாக்கெட் ஷாம்பு (ஒரு ரூபாய் ஷாம்பு) மட்டும் சேர்த்து துவைத்து பாருங்கள் துணிகளில் உள்ள அழுக்கும் சீக்கிரம் நீங்கி விடும். துணியும் சாயம் போகாது அதே நேரத்தில் பழைய துணி போல ஆகாது. இந்த முறையில் அனைத்து துணிகளுமே துவைக்கலாம். வெள்ளைத் துணிகளையும் இதே போல லிக்விட் ஷாம்பு சேர்த்து துவைக்கலாம் ஆனால் தனியாக துவைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதெல்லாம் நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா இனி வார வாரம் இல்லை தினமும் பூஜை செய்யனும்னா கூட சந்தோஷமா செய்யலாம். ரொம்ப சுலபமா பூஜை வேலைகளை முடிக்க சூப்பரான டிப்ஸ்.

இதில் உள்ள சின்ன சின்ன குறிப்புகள் எல்லாம் தெரிந்து கொண்டால் நம் வீட்டில் அதிகப்படியான வேலைகளை சீக்கிரமாக முடிக்க உதவியாக இருக்கும் இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -