இதெல்லாம் நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா இனி வார வாரம் இல்லை தினமும் பூஜை செய்யனும்னா கூட சந்தோஷமா செய்யலாம். ரொம்ப சுலபமா பூஜை வேலைகளை முடிக்க சூப்பரான டிப்ஸ்.

vilakku kolam
- Advertisement -

பெண்கள் வீட்டில் செய்யும் மற்ற வேலைகளை விட பூஜை வேலைகளை மிகுந்த அக்கறையுடன் செய்வார்கள். இதற்கு காரணம் இது வேலை மட்டும் இல்லை நம் குடும்பம் நன்றாக இருக்கவும், முன்னேறவும் தெய்வத்தை வணங்கும் இடம். அப்படியான இந்த பூஜை வேலைகளை செய்வது உண்மையில் கொஞ்சம் கஷ்டமான தான். அதை சுலபமாகவும், சீக்கிரமாகவும் முடிக்க முடியும் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பூஜை அறையில் படங்களுக்கு குங்குமப் பொட்டு வைக்க பெரும்பாலும் சந்தனத்தை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் சந்தனத்தில் தண்ணீருக்கு பதிலாக கொஞ்சம் பால் ஊற்றி குழைத்து வைத்தால் சந்தனம் சீக்கிரம் உதிராது. அதே நேரத்தில் பார்க்கவும் பளிச் சென்று இருக்கும். இதனால் அடிக்கடி நாம் படத்தை துடைத்து பொட்டு வைக்கும் வேலை இருக்காது.

- Advertisement -

விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெயில் கொஞ்சம் தசாங்கம் பவுடரை கலந்து வைத்து விட்டால், விளக்கை ஏற்றும் போது வீடு நல்ல நறுமணத்துடன் இருக்கும். இதனால் நறுமணத்திற்காக தனியாக நீங்கள் எதையும் செலவு செய்து வாங்க வேண்டாம். தசாங்கம் பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதற்கு பதில் பச்சை கற்பூரத்தையும் பயன்படுத்தலாம்.

அடுத்து பூஜையறையில் பச்சரிசி மாவில் கோலம் தான் போடுவார்கள். இதற்கென தனியாக மாவு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இனி அப்படி செய்ய வேண்டியதில்லை ஒரு சின்ன பௌலில் ரெண்டு டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு, இதற்கு கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டான்ட் மாவு கூட பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மைதா மாவு இரண்டையும் கலந்து கோலம் போட்டால் கோலம் பளிச்சென்று இருக்கும். பச்சரிசி மாவில் போட்டால் உடனே உதிர்ந்து விடும். இது அப்படி ஆகாமல் நீண்ட நாட்கள் உதிராமல் இருக்கும்.

- Advertisement -

சாம்பிராணி பவுடரில் கொஞ்சம் தசாங்கம் பவுடரும் சிறிதளவு வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணி போடும் போது வீடு அவ்வளவு நறுமணத்துடன் இருக்கும் கோவிலில் இருப்பதை போன்றே உணவீர்கள். அதே போல கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றும் முன் லேசாக தண்ணீரில் தொட்ட பின் ஏற்றினால் நீண்ட நேரம் எரியும்.

இதே போல் சாமி படங்களை துடைக்கும் பொழுது தண்ணீருக்கு பதிலாக உங்கள் வீட்டில் பயன்படுத்தும் எந்த ஹேண்ட் வாஷாக இருந்தாலும் அதை கொஞ்சம் ஒரு காட்டன் துணியில் சேர்த்து துடைத்து விட்டால் படங்களிலும் தண்ணீர் பட்டு வீணாகாது. அதே நேரத்தில் கறைகள் அனைத்தும் நீங்கி சுவாமி படம் பார்க்கவே பளிச்சென்று இருக்கும். இதனால் படங்களை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் இருக்காது.

- Advertisement -

கற்பூர தீபாரதனை காட்டும் தூபக் காலில் நாம் அப்படியே கற்பூரம் வைத்து ஏற்றாமல் அதில் ஒரு சின்ன அகல் விளக்கை வைத்து அதில் கற்பூரம் ஏற்றினால்தூப காலை அடிக்கடி தேய்த்து சுத்தம் செய்யும் வேலை குறையும்.

விளக்கை தினமும் நாம் எப்படி தான் சுத்தம் செய்து வைத்தாலும் எண்ணெய் கறை பட்டு பாசிப் படைந்தது போல இருக்கும். இதை தேய்க்க இனி பெரிதாக எதையும் செய்ய வேண்டி இல்லை கொஞ்சம் ஹன்ட்வாஷை எடுத்து விளக்கு முழுவதும் தேய்த்து விட்டு தேங்காய் நாரை வைத்து தேய்த்தாலே போதும் பளிச் சென்று மாறி விடும். இந்த டிப்ஸ் ரொம்பவே உதவியா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணிபாருங்க.

இதையும் படிக்கலாமே: மண் சட்டியை பயன்படுத்த ஆசை இருந்தும் அதை பழக்குறது கஷ்டம்ன்னு நினைக்கிறீங்களா? இதோ ரொம்ப சீக்கரம் மண்சட்டியை பழகி காலத்துக்கும் உடையாமல் இருக்கு சூப்பர் ட்ரிக்ஸ் இருக்க. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

சாமி படங்களில் பூக்களை வைக்கும் போது அது அடிக்கடி கீழே விழுந்து விடும். அதற்கு படங்களின் மேல் பகுதியில் ஒரு நூல் வைத்து கட்டி விடுங்கள். அதன் பிறகு அதில் பூவை சொருகி வைத்து விட்டால் பூக்கள் அடிக்கடி கீழே விழாமல் இருக்கும். காய்ந்த பிறகும் கூட விழாமல் படத்தில் இருக்கும் இதனால் உங்களுக்கு சுத்தம் செய்யும் வேலையும் குறையும். இந்த குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிமையான குறிப்புகள் தான். ஆனால் தெரிந்து வைத்துக் கொண்டால் பூஜை அறையில் நாம் செய்யும் வேலைகள் பாதியாக குறைந்து விடும்.

- Advertisement -