இனி மீன், இறால், நண்டு இதையெல்லாம் சுத்தம் செய்யும் போது, இதை வைத்து மட்டும் சுத்தம் செய்து பாருங்களேன். அப்புறம் உங்க வீட்ல மட்டும் இல்ல, உங்க மேல கூட கொஞ்சம் கூட அசைவ வாடையே வராது.

- Advertisement -

வீட்டில் சமையல் போன்ற பெரிய வேலைகளை கற்றுக் கொள்வதுடன், இந்த சின்ன சின்ன குறிப்புகளையும் சேர்த்து தெரிந்து வைத்துக் கொண்டால் வேலையும் சுலபமாக முடிந்து விடும் வேலை செய்த அலுப்பும் தெரியாது. இந்த பதிவில் உள்ள குறிப்புகள் எல்லாம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் நேரம், பணம் எல்லாம் மிச்சமாவதுடன் டென்ஷனும் பாதி அளவுக்கு குறைந்து விடும். வாங்க அது என்ன குறிப்பு எப்படி செய்வது என்பதை எல்லாம் இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சில சமயங்களில் முட்டை வேக வைக்கும் போது சரியாக வேகும் முன்பே எடுத்து விட்டோம் என்றால் உரிக்கும் போது தோலுடன் சேர்த்து முட்டையும் உரிந்து வந்து விடும். இது போன்ற சமயங்களில் அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் அப்படியே இந்த முட்டையை இரண்டு அல்லது மூன்று நொடிகள் மட்டும் வைத்தால் போதும். முழுவதுமாக வெந்து விடும். அதன் பிறகு ஆற வைத்து பின் உரித்தால் ரொம்பவே சுலபமாக தோல் மட்டும் வந்து விடும்.

- Advertisement -

வீட்டில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ், பிஸ்கெட்ஸ் போன்றவற்றை வாங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்போம். அப்படி வைத்தாலுமே கூட சில நேரங்களில் அவை மொறு மொறுவென்று இல்லாமல் போய் விடும். இனி இது போல ஆகாமல் இருக்க பாக்ஸின் அடியில் கொஞ்சம் அரிசியை போட்ட பிறகு அதன் மேல் ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு அதன் பிறகு நீங்கள் எடுத்து வைக்கும் பிஸ்கட், ஸ்நாக்ஸ் எதுவாக இருந்தாலும் போட்டு வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் கெடாமல், அப்போது வாங்கியது போலவே இருக்கும்.

அடுத்து இஞ்சி பூண்டு அரைத்து நாம் அதிக நாளுக்கு வைத்து பயன்படுத்தும் போது அதன் சுவை மாறி விடும். சிலர் இதற்காக உப்பு சேர்த்து அரைப்பார்கள். அப்படி சேர்க்கும் போது கூட சில நேரங்களில் நீர்த்தது போல ஆகி விடும். இனி அப்படி ஆகாமல் இருக்க இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைத்தவுடன் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து வைத்து விட்டால் இஞ்சி பூண்டின் சுவையும் மாறாது. அதே நேரத்தில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

- Advertisement -

அசைவம் சமைக்கும் போது மீன், இறால், நண்டு என எதுவாக இருந்தாலும் என்ன தான் நாம் கடையில் சுத்தம் செய்து வாங்கி வந்தாலும், வீட்டில் ஒரு முறை கட்டாயமாக அதை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வீடு சமையலறை என்று அனைத்து இடங்களிலும் அதன் வாடை வீசும். சில நேரங்களில் சமைத்தவுடன் அதில் கூட அந்த வாடை இருக்கும். இனி இது போல வராமல் இருக்க, வாங்கி வந்து சுத்தம் செய்யும் போது உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் ஒரு இரண்டு முறை அலசி எடுத்து விடுங்கள். அதன் பிறகு அரிசி கழுவிய தண்ணீரில் இந்த அசைவ பொருட்களை போட்டு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து சமைத்தால் அசைவ வாடை கொஞ்சம் கூட இருக்காது.

அதே போல் அசைவம் சுத்தம் செய்த பிறகு, குளித்தாலும் கூட நம் மீது அன்று முழுவதுமே வாடை வீசிக் கொண்டே இருக்கும். அதையும் சுலபமாக போக்கி விடலாம். சமைத்து முடித்த பிறகு நீங்கள் பயன்படுத்தும் எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் அதில் கொஞ்சம் சேர்த்து கை, கால்களை சுத்தமாக கழுவி விடுங்கள். வாடை வரவே வராது.

- Advertisement -

குழந்தைகளுக்கு சில்வர் பாட்டலில் தண்ணீர் கொடுத்து அனுப்பவோம். அந்த பாட்டிலை எப்படி சுத்தம் செய்தாலும் உள்ளே கொஞ்சம் வழுவழுப்பு தன்மை இருக்கும். இனி பாட்டில் கழுவும் போது அதில் கொஞ்சம் அரிசி, லிக்விட் சேர்த்து நன்றாக குலுக்கி கழுவினால் பாட்டிலில் வழுவழுப்புத் தன்மை இருக்காது. அரிசிக்கு பதில் கல் உப்பு சேர்த்து கழுவினால் அது இன்னும் நல்லது.

இதையும் படிக்கலாமே: இனி கருங்கல்லையே போட்டாலும், அதை உங்க வீட்டு கிரைண்டர் அரைத்து தள்ளிவிடும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. உதவாத கிரைண்டரில் கூட பொங்க பொங்க உளுந்தை ஆட்டி எடுக்கலாம்.

இந்த பதிவில் உள்ள குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இனி நீங்களும் உங்கள் வீட்டு சமையல் வேலையில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வேலையை எளிமையாக்கி கொள்ளுங்கள்

- Advertisement -