இனி கருங்கல்லையே போட்டாலும், அதை உங்க வீட்டு கிரைண்டர் அரைத்து தள்ளிவிடும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. உதவாத கிரைண்டரில் கூட பொங்க பொங்க உளுந்தை ஆட்டி எடுக்கலாம்.

idli-mavu
- Advertisement -

நம்முடைய எல்லோர் வீட்டிலும் இப்போது கிரைண்டர் இருக்கிறது. மாவு ஆட்ட பயன்படுத்தும் இந்த கிரைண்டரில் ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். சில வீடுகளில் உளுந்து வெந்தயம் நன்றாக அரைபட்டு பொங்கி வராது. அடியில் இருக்கும் உளுந்தும் வெந்தயம் அப்படியே நிற்கும். அரிசி போட்டால் சில கிரைண்டரில் சிக்கிக் கொள்ளும். இப்படி மாவு அரைப்பதில் சில சிக்கல்கள் இருக்கும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்ய பயனுள்ள வீட்டு குறிப்பு களையும், கிரைண்டரில் இன்னும் நமக்கு தெரியாத சில பல விஷயங்களையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குறிப்புகளை படித்து பாருங்கள் உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் அதை பின்பற்றி பலன் பெறலாம்.

புது கிரைண்டரை சுத்தம் செய்யும் முறை:
புதிய கிரைண்டர், வாங்கியதும் அதில் நேரடியாக நம்மால் மாவு அரைக்க முடியாது. அதில் தூசியும் சின்ன சின்ன கற்கள் கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கிரைண்டருக்கு உள்ளே நரநரப்பாக இருக்கும். வாழைத்தண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, புது கிரைண்டருக்கு உள்ளே போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கிரைண்டரை ஓட விடுங்கள். கிரைண்டரில் இருக்கும் தூசு தூம்பு எல்லாம் இந்த வாழைத்தண்டோடு அரைபட்டு நமக்கு வெளியேறிவிடும். வாழைத்தண்டுக்கு பதிலாக உம்மி கூட பயன்படுத்தலாம். சில பேருக்கு உம்மி கிடைக்காத பட்சத்தில் வாழைத்தண்டை பயன்படுத்துங்கள் அதிலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய கிரைண்டரை கூட இந்த முறையில் சுத்தம் செய்யலாம்.

- Advertisement -

உளுந்து மாவு பொங்கி அரைபட்டு வர டிப்ஸ்:
சில பேர் வீடுகளில் உளுந்து கிரைண்டரில் போட்டால் சரியாக அரைபட்டு வராது. அடியில் உளுந்தும் வெந்தயமும் அப்படியே நிற்கும். என்னதான் கையைப் போட்டு அடியில் இருந்து மாவை வழித்து விட்டாலும், முழு முழு உளுந்து அரைப்படாமல் அப்படியே கிரைண்டருக்கு அடியில் தங்கிவிடும். இதற்கு காரணம் என்ன தெரியுமா. கிரைண்டருக்கு உள்ளே இருக்கும் அந்த வெள்ளை நிற பிளேடு தான்.

அந்த வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பிளேடை சரியாக அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். வெள்ளை பிளேடுக்கு பக்கவாட்டிலும், அடியிலும் நிறைய இடைவெளி இருந்தால், அதன் உள்ளே மாவு சென்று சரியாக அரைபட்டு வராது. ஆகவே அந்த பிளேட் ஸ்க்ரூவை லேசாக கழட்டி சரியாக செட் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிளேடுக்கும் கிரைண்டருக்கும் இடையே கால் இன்ச் அளவு ஓட்டை இருந்தால் போதும். அதிக அளவில் இடைவெளி இருக்கும் போது மாவு சீக்கிரத்தில் அரைபடாது. 10 நிமிடத்தில் அரைப்பட வேண்டிய மாவு, 1 மணி நேரம் ஆனாலும் நமக்கு சரியாக அரைபட்டு வராது. ஆகவே அந்த பிளேடை முதலில் சரி பார்த்துக் கொள்ளவும்.

ஒரு நீளமான தோசை கரண்டி அல்லது மரக்கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். உளுந்து மாவு கிரைண்டரில் ஓடிக் கொண்டிருக்கும்போது, அந்த கரண்டியை கிரைண்டருக்கு அடிப்பக்கம் வரை விட்டு மாவை தள்ளி விட வேண்டும். இப்படி செய்தால் அடியில் இருக்கும் மாவு கூட மேலே வந்து, சரியான முறையில் மாவு அரைபட்டு நமக்கு கிடைக்கும். அந்த கரண்டியை வைத்து மாவை நாலா பக்கங்களிலும் தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அரை பட்ட மாவை வழித்து வழக்கம் போல டப்பாவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கிரைண்டரை எளிமையாக சுத்தம் செய்வது எப்படி?
மாவை எல்லாம் வழித்து எடுத்த பின்பு கிரைண்டரை சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு பெரிய வேலை. கிரைண்டரில் இருந்து மாவை எல்லாம் சுத்தமாக வழித்து எடுத்து விட்டு, கிரைண்டர் ஓடும்போதே அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி உங்கள் கையை கொண்டு தேய்த்து கழுவி விட வேண்டும். அப்போது கிரைண்டரில் இருக்கும் மாவு முழுவதும் சுத்தமாக நீங்கிவிடும்.

முதல் முறை கிரைண்டர் கழுவிய அந்த தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டி விடுங்கள். மீண்டும் கிரைண்டருக்கு உள்ளே 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக கல்லுப்பை போட்டு, ஒரு நிமிடம் கிரைண்டரை ஓட விட்டால், கிரைண்டருக்கு உள்ளே பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தமாக கிரைண்டர் கழுவி நமக்கு கிடைக்கும். அதன் பின்பே வழக்கம் போல கிரைண்டரை எடுத்து சிங்கிள் வைத்து சுலபமாக நார் போட்டு தேய்த்து கழுவிக்கொள்ளலாம். கல் உப்பு போட்டு கிரைண்டரை ஒரு நிமிடம் ஓட விடும் போது உங்களுடைய கிரைண்டர் சூப்பரா சுத்தம் ஆகிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.

ரொம்ப நேரம் ஓடினாலும் கிரைண்டர் மோட்டார் நீண்ட நாட்களுக்கு உழைக்க டிப்ஸ்:
சில பேர் வீடுகளில் கிரைண்டர், உளுந்தை ஆட்டி எடுக்கும் போதே அப்படியே சூடாக தொடங்கிவிடும். மோட்டரில் இருக்கும் ஹீட் வெளியேறாததுதான் இதற்கு காரணம். கிரைண்டர் மோட்டர் இருக்கும் பகுதியில், காற்று வெளியேறுவதற்கு சிறிய அளவில் ஓட்டைகள் இருக்கும். அந்த ஓட்டைகளுக்கு உள்ளே தூசு அடைந்து, ஒட்டடை சேர்ந்திருந்தால் கூட மோட்டார் ஓடும்போது, அதனுடைய காற்று வெளியேறாது. ஆகவே மாதத்திற்கு ஒரு முறை அந்த ஓட்டைகளை ஒரு பிரஷ் வைத்து தண்ணீர் எதுவும் போடாமல் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 2 நிமிசத்துல தேங்காய் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா இந்த சட்னியை செஞ்சு பாருங்க. சட்னியே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட பத்து இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

கிரைண்டர் ஓடி முடித்த பின்பு சில பேருடைய கிரைண்டரை தொட்டால் ரொம்பவும் சூடாக இருக்கும். துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக ஈரத்தை பிழிந்து விட்டு, அந்த ஈர துணியை வைத்து கிரைண்டர் முழுவதும் துடைத்து விடுங்கள். குறிப்பாக மோட்டர் இருக்கும் அந்த பக்கத்தின் மேல் பகுதியை நன்றாக துடைத்து விடுங்கள். மோட்டார் சூடு சீக்கிரம் தணியும். மோட்டர் சீக்கிரம் ரிப்பேர் ஆகாமலும் இருக்கும். நீண்ட நாட்களுக்கு கிரைண்டர் நீடித்து உழைக்கும். இப்படி ஈரத் துணியை போட்டு துடைக்கும் வேலைகளை செய்யும் போது கரண்டில் இருந்து பிளக்கை எடுத்து, வேலை செய்வது நல்லது. இந்த சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றினாலே உங்கள் வீட்டு கிரைண்டர் சூப்பராக வேலை செய்யும். மாவு அரைப்பது எளிதாகிவிடும். குறிப்பு பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -