சமையல்கட்டில் நீங்கள் சிரமப்பட்டு செய்யக்கூடிய இந்த 5 விஷயங்களை இனி செய்ய வேண்டாம்! உங்கள் வேலையை சுலபமாக்க இதை படியுங்கள்!

kitchen1
- Advertisement -

சமையல்கட்டில் சில விஷயங்களை நாம் நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தால், நம்முடைய வேலைகள் ரொம்பவும் சீக்கிரமாக முடிந்துவிடும். அத்தகைய வேலையை சுலபமாக்க கூடிய அற்புதமான 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த தவறுகளை எல்லாம் செய்யாமல் இப்படி திருத்திக் கொண்டால் நிறையவே நன்மைகள் உண்டு. சமையல் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த 5 குறிப்புகள் என்னென்ன! இனி பார்ப்போம்.

குறிப்பு 1:
காபி தூளுடன் டீ தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் காபி தூள், டீ தூள் சேர்ப்பது அவ்வளவு நல்லதல்ல! எனவே இந்த ஒரு தவறை ஒருபோதும் செய்து பார்க்காதீர்கள். காபி பீன்களில் இருக்கும் தன்மையும், தேயிலையில் இருக்கக் கூடிய தன்மையும் வெவ்வேறானவை இதை ஒன்றாக கலந்து பருகுவது என்பது தவறான செயலாகும்.

- Advertisement -

குறிப்பு 2:
நீங்கள் காய்கறி வகைகள் அல்லது கிழங்கு வகைகளை சமைக்கும் போது தெரியாமல் லேசாக அடி பிடித்து விட்டால் அதை சுரண்டி எடுப்பதற்கு ரொம்பவே சிரமமாக இருக்கும். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள். இந்த மாதிரியான சமயங்களில் சிறிது நேரம் அதை மூடிப் போட்டு வைத்து விட்டால் போதும், கொஞ்ச நேரத்தில் ஆவி அதனுள் சேர்ந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதன் பிறகு நீங்கள் கரண்டி வைத்து எடுத்தால் அடிப்பிடித்த தடம் தெரியாமல் இலகுவாக வந்துவிடும். பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இதனால் அடிப்பிடித்த பாத்திரங்களை தேய்ப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

குறிப்பு 3:
தயிர் உறை ஊற்ற போகிறீர்கள் என்றால் பாலை 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து கொண்டால் தான் தயிர் கடையில் கிடைப்பது போல ரொம்பவும் திக்காக கிடைக்கும். இல்லை என்றால் நீங்கள் என்னதான் செய்தாலும் தயிர் கெட்டியாக உங்களுக்கு கிடைக்காது. எனவே இந்த தவறை செய்யாதீர்கள். பாலை நன்கு கொதிக்க வைத்ததும், ஒரு கப் பாலுக்கு, ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து எவர்சில்வர் பாத்திரம் அல்லது மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு குறைந்தது 8 மணி நேரம் அப்படியே வெளியில் வைத்து விடுங்கள். பிறகு எடுத்துப் பார்த்தால் திக்கான தயிர் ரெடி.

- Advertisement -

குறிப்பு 4:
கடையில் வாங்கும் மயோனைஸ் எந்த அளவிற்கு ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்கு தெரியாது எனவே அதை செய்யாதீர்கள்! வீட்டிலேயே ஒரு நிமிடத்தில் எப்படி மயோனைஸ் தயாரிப்பது? அரை கப் அளவிற்கு சாதாரண சமையல் எண்ணெயை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் அதே அளவவிற்கு முழுமையாக கொழுப்பு நிறைந்துள்ள பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கால் ஸ்பூன் உப்பு, 10 பூண்டுப் பல், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து 5 நிமிடம் மிக்ஸியை வேகமாக இயக்கினால் மயோனைஸ் ரெடி! இதைவிட இன்னும் திக்காக வேண்டும் என்றால் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரை நிமிடம் மிக்ஸியை இயக்குங்கள், கெட்டியான மயோனைஸ் கிடைக்கும்.

குறிப்பு 5:
முருங்கைக் கீரையை நீங்கள் வாங்கி வைத்து கையால் இனி சிரமப்பட்டு ஆய வேண்டிய அவசியமில்லை. இரவு வாங்கி வைத்தால் அதை ஒரு முழு நீள நியூஸ் பேப்பரில் மடித்து வைத்து விடுங்கள். காலையில் எழுந்து பார்த்தால் காம்புகள் தனியாகவும், இலைகள் தனியாகவும் உதிர்ந்து இருக்கும். அதன் பிறகு அதில் இருக்கும் குப்பைகளை மட்டும் சுத்தம் செய்தால் ரொம்பவும் ஈசியாக வேலை முடிந்துவிடும்.

- Advertisement -