ஃப்ரிட்ஜை இப்படி பயன்படுத்தினால் வீட்டில் இருப்பவர்கள், நோயாளிகளாக தான் மாறுவார்கள். ஃப்ரிட்ஜை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்தக்கூடாது?

fridge0
- Advertisement -

அனைவர் வீட்டிலும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இருக்கும் ஒரு பொருள் பிரிட்ஜ். இன்று இருக்கும் அவசர உலகத்தில் ஃப்ரிட்ஜை பயன்படுத்தாமல் எந்த ஒரு சமையல் பொருட்களையும் பராமரிப்பது என்பது கடினமாகத்தான் உள்ளது. ஆனால் ஃப்ரிட்ஜை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளும், ஆரோக்கியபாதிப்புகளும் பலருக்கும் தெரிவதில்லை. ஃப்ரிட்ஜை எப்படி, எதற்காக பயன்படுத்த வேண்டுமென்று தெளிவாக தெரியாமலேயே தவறான முறையில் பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எதற்காக குளிர்சாதன பெட்டி:
மருந்துகள், சமைக்காத உணவு பொருட்கள் இவை வீணாகாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மின்சாதன இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்டதே குளிர்சாதனப் பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாக இருக்கும் காலங்களில், அவற்றை பதப்படுத்தி குறிப்பிட்ட அந்த உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்போது அதனை பயன்படுத்தவும், உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும், மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், பால் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதற்கும் இதற்காக மட்டுமே குளிர்சாதனப்பெட்டி உருவாக்கப்பட்டது.

- Advertisement -

அவசியம் குளிர்சாதன பெட்டி தேவையா?
நம் முன்னோர்கள் குளிர்சாதன பெட்டியை அறிந்திருக்கவில்லை. அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருந்தில்லை. அவர்களிடமிருந்த சுறுசுறுப்பும், நேரமும் இன்று நம்மிடம் இல்லையென்பதால் சோம்பேறித் தனத்திற்கு சாமரம் வீசுவது போல் அனைவரும் ஃப்ரிட்ஜிற்கு பழகிவிட்டோம். மேல் நாட்டவர்கள் அவர்களின் சீதோசன நிலை வேலை சூழ்நிலைக்காக ஃப்ரிட்ஜை பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் வெளிநாட்டவர்களின் முறையை பின்பற்றும் நமக்கு ஃப்ரிட்ஜை பயன்படுத்துவதொன்றும் விதிவிலக்கில்லையே. அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும் 3 வேலை சமைக்க வேண்டியதுமில்லை என்பதே ஃப்ரிட்ஜை பயன்படுத்தும் பலரின் நினைப்பு. இந்த நினைப்பே தவிர்த்தால் ஃப்ரிட்ஜினால் வரும் ஆபத்துகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:
வீட்டில் உள்ளவர்களுக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் உண்டாவதற்குக் காரணம் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை உண்பதேயாகும். ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியுமா? என நினைப்பவர்களுக்காக சில கட்டளைகள்.

fridge0

1. 5 முதல் 60 டிகிரி செல்சியஸில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரும் என்பதால் 15 முதல் 5 டிகிரி செல்சியஸில் இருக்குமாறு டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டும். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸில் இருப்பது மிகவும் நன்மை தரும்.

- Advertisement -

2. மின்சாரம் இல்லாத நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே மின் சாதன பெட்டியில் இருக்கும் உணவுகள் நன்றாக இருக்கும். அதற்கு மேல் தொடர்ந்து மின்சாரம் இல்லலையென்றால் ஃப்ரிட்ஜில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணக் கூடாது.

3. ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், ட்ரேவில் பால் பாக்கெட், கீழ் தட்டில் காய்கறிகள், பழங்கள், நடுத்தட்டில் மாவு மற்றும் மற்ற உணவுகள், மேல்தட்டில் சமைத்த உணவுப்பொருட்கள் என்றும் உணவுப் பொருட்களை தனிதனியாக பிரித்து நன்றாக மூடி போட்டு ஒவ்வொரு பொருளுக்கும் இடையே இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.

mutton 1

செய்யக்கூடாத விஷயங்கள்:
1. பிசைந்து வைத்த மைதா மாவு, கோதுமை மாவு போன்றவற்றை அதிக நாட்கள் பிரிட்ஜில் வைக்கக் கூடாது இவற்றில் பூஞ்ஜைகள் எளிதாக உருவாகிவிடும்.

2. ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவற்றை ஸ்டோர் செய்வதை தவிர்க்க வேண்டும். இவற்றில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அவை மற்ற உணவுப் பொருட்களுக்கும் எளிதாக பரவிவிடும்.

fridge

3. சூடாக சமைத்த உணவுகளை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடக் கூடாது. அது ஃபிரிட்ஜின் டெம்ப்பரெச்சரை முழுவதுமாக மாற்றி விடும்.

4. முடிந்தவரை சமைத்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவினை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு, மறுபடியும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவர். இவ்வாறு பயன்படுத்தும் உணவு உணவாக இல்லாமல் நிச்சயம் விஷமாக மாறிவிடும். இவ்வாறான உணவுகளை சாப்பிடுபவர்கள் நிச்சயம் நோயாளிகளாக தான் இருப்பார்கள்.

- Advertisement -