ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்

oothapam

தோசையினை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் அதனுடன் கேரட் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து சாப்பிடுவர். அந்த முறையே பிற்காலத்தில் ஊத்தப்பமாக உருமாறியது. இந்த பதிவில் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

அரைத்த இட்லி மாவு – 1 கப்
துருவிய கேரட் – 1/2 கப்
துருவிய தேங்காய் – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
பீன்ஸ் – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

ஊத்தப்பம் செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவினை கொட்டி அதனுடன் துருவிய கேரட், துருவிய தேங்காய், பீன்ஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும் . அனைத்து காய்கறிகளும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு இருக்க வேண்டும்.

பிறகு கலந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்பொது ஊத்தப்பம் மாவு தயார்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசைக்கல்லினை வைத்து மாவினை ஊற்றி எண்ணெய் விட்டு வேக விட்டு எடுத்தால் சுவையான ஊத்தப்பம் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 5 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

2019 ஆம் ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிக்கலாமே:
புளியோதரை செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uthappam recipe in Tamil. It is also called Oothappam ingredients in Tamil or Uthappam preparation in Tamil or Uthappam seimurai in Tamil or uthappam seivadhu eppadi in Tamil.