ஹோட்டலுக்கு போனா கூட இப்படி ஒரு ரவை உப்புமா கிடைக்காது. ரசித்து ருசித்து சாப்பிடும் படியான ரவை உப்புமா செய்ய இந்த ஐடியா போதும்.

rava-uppuma_tamil
- Advertisement -

பின் சொல்லக்கூடிய குறிப்புகளை அப்படியே பின்பற்றி ரவை உப்புமா செய்தால் அந்த ரவை உப்புமா சூப்பரா இருக்கும். இதுபோல ஒரு ரவை உப்புமாவை ஹோட்டலுக்கு சென்றாலும் நம்மால் சாப்பிட முடியாது. உங்கள் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரவை உப்புமாவை சூப்பராக செய்வது எப்படி சின்ன சின்ன ரகசிய குறிப்புகளுடன் சூப்பரான ரவை உப்புமா ரெசிபி இதோ உங்களுக்காக.

200 கிராம் அளவுள்ள ரவைக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். ஒரு ஆழாக்கு ரவையை அளந்து எடுத்துக் கொண்டால் அதிலேயே தண்ணீரையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். 1 கப் ரவைக்கு, 2½ கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும். இதுதான் தண்ணீரின் அளவு. பிறகு ரவா உப்புமா எப்படி தாளிப்பது என்று பார்ப்போம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். முதல் வேலை இதுதான். அடுப்பு சிம்மிலேயே தான் இருக்க வேண்டும். கடுக – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு சீரகம் – 1/2 ஸ்பூன் பெருங்காயம் – 2 சிட்டிகை, மிக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, மிகப் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு வதக்கி விடுங்கள். இஞ்சி துருவல் லேசாக வதங்கி வந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு போட்டு வதக்குங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் மிகப் பொடியாக நறுக்கிய கேரட் – 4 டேபிள் ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 4 டேபிள் ஸ்பூன், இந்த காய்கறிக்கு தேவையான இரண்டு சிட்டிகை உப்பை தூவி, ஒரு நிமிடம் போல வதக்குங்கள். இப்போது எடுத்து வைத்திருக்கும் ரவையை இதில் போட்டு வறுக்க வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்கிறது. அடுப்பை தீயை அதிகரிக்கக் கூடாது. ரவை 4 நிமிடம் வறுபட வேண்டும். பொல பொலன்னு ரவை வந்தவுடன், லேசாக ரவையின் நிறம் மாறி வந்ததும் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

ரவையை கடாயில் கொட்டி விட்டு இந்த பக்கம் அடுப்பில் சுடு தண்ணீரை கொதிக்க வைத்து விடுங்கள். 1 கப் அளவுக்கு, 2 1/2 கப் அளவு தண்ணீர் கொதிக்கட்டும். நான்கு நிமிடம் ரவை வறுபடுவதற்குள் தண்ணீர் கொதித்து விடும். ரவை வறுபட்டவுடன் ரவைக்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, கொதிக்கின்ற தண்ணீரை இந்த ரவையில் ஊற்றி, மிகப் பொடியாக நறுக்கிய சின்ன தக்காளி பழம் – 1 இதோடு போட்டு, கலக்க வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்கிறது. ஒரு மூடி போட்டு கலந்து விட்ட ரவையை நான்கு நிமிடங்கள் வேக வையுங்கள்.

அதன் பின்பு மூடியை திறந்து பார்த்தால் 90% ரவை உப்புமா நமக்கு தயாராக வந்திருக்கும். ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் உங்கள் தேவைக்கு ஏற்ப தேங்காய் பூ தூவி, கொத்தமல்லி தழை மிகப் பொடியாக நறுக்கி தூவி, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்ச பழச்சாறு இதன் மேலே பிழுந்து விட்டு கலந்து மூடி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

அந்த கடாய் சூட்டிலேயே உப்புமா மலர்ந்து விடும். ஐந்து நிமிடம் கழித்து எடுத்து பார்த்தால் உப்மாவை கிளறி பாருங்க. உதிரி உதிரியா சூப்பரான உப்மா உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்க இஷ்டம் போல இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பரிமாறலாம். வேற என்னங்க வேணும் சுடச்சுட இந்த உப்புமாவை மழைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -