உங்களுக்கு உதிரி உதிரியான உப்புமா செய்ய வரலையா? இந்த ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நீங்களும் ஹோட்டல் சுவையில் உதிரியான உப்புமா செய்யலாம்!

ravai-uppuma-recipe
- Advertisement -

உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு சிலருக்கு வரவே செய்யாது. என்ன தான் சரியான அளவுகளில் தண்ணீரை ஊற்றினாலும் கூட ரவை உப்புமா உதிரி உதிரியாக வரவில்லை என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் உதவியாக இருக்கும். ஹோட்டல் சுவையில் ரொம்பவே சுலபமாக உதிரி உதிரியான ரவை உப்புமா எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் நாமும் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

ravai

ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய பச்சை மிளகாய் – ஒன்று, தக்காளி – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, மல்லித்தழை – சிறிதளவு, தண்ணீர் – 3 கப்.

- Advertisement -

ரவை உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் ரவையை மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த ரவையாக இருந்தாலும் நீங்கள் செய்யும் பொழுது ஒரு முறை நன்கு வறுத்தால் உதிரி உதிரியான உப்புமா சுலபமாக கிடைக்கும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

rava-upma1

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை ஒரு கொத்து, கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இந்த பருப்பு வகைகளை நன்கு வறுத்ததும் ஒரு பச்சை மிளகாய் மற்றும் பொடிப் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி நன்கு வதங்கியதும் நீங்கள் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கலந்து விட வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பொதுவாக ரவை உப்புமா செய்வதற்கு தண்ணீரை கொதிக்க வைத்த பின்பு தான் ரவையை சேர்ப்பார்கள் ஆனால் உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு இப்படி மசாலாவுடன் சேர்த்து முதலில் ரவையை வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இங்கு 2 கப் அளவு ரவை கொடுக்கப்பட்டுள்ளதால் மூன்று கப் அளவிற்கு தண்ணீரை சேர்த்து தனியாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரை இதனுடன் சேர்த்து ஒருமுறை கலந்து விடுங்கள்.

rava-upma2

ரவை சற்று நேரத்தில் தண்ணீர் முழுவதையும் நன்கு உரிந்து விடும். பிறகு ஒரு முறை கலந்து விட்டு ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். 2 நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை கிளறி விடுங்கள். மறுபடியும் மூடி போட்டு மூடி விடுங்கள். திரும்பவும் 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய் விட்டு நன்கு அழுத்தம் கொடுத்து கிண்டி விட்டால் உதிரி உதிரியான சூப்பரான ஹோட்டல் சுவையில் ரவை உப்புமா நம் வீட்டிலேயே தயார் ஆகிவிடும். காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்தால் கிச்சடி போல் இருக்கும். ரொம்பவே சுவையுள்ள இந்த ரவை உப்புமாவை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -