வாராக் கடனை வசூல் செய்ய 9 நாள் போதும்! உங்கள் கைகளால் இந்த காகிதத்தை 9 முறை கிழித்து போடுங்கள். கடன் வாங்கியவரே, உங்களைத் தேடிவந்து கடன் தொகையை ஒப்படைப்பார்.

kadan1

நம் கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுவது ஒருவிதம் என்றால், நம் கையில் இருக்கும் பணத்தை அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக கொடுத்துவிட்டு, அந்த கடனை திரும்பவும் வசூல் செய்ய முடியாமல் படக்கூடிய கஷ்டம் என்பது ஒரு விதம். நமக்கு கையிருப்புத் தொகை இருக்கும் போது, அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ நம்பிக்கையோடு பணத்தை கொடுத்து உதவி செய்து இருப்போம். ஆனால், அவர்கள் அந்த நன்றிக்கடனை மறந்திருப்பார்கள். வாங்கிய தொகையை சரியான முறையில் திருப்பித் தர வேண்டும் என்ற நினைப்பு சில பேருக்கு இருக்காது. வாங்கும் வரை இருக்கக்கூடிய நாணயத்தை, கையில் பணம் வாங்கிய பின்பு ஒரு துளி கூட காட்ட மாட்டார்கள்.

kadan

உங்களுடைய பணத்தை நீங்களும் நம்பிக்கையாக யாருக்கேனும் கொடுத்து, அவர்கள் உங்களை ஏமாற்றி இருந்தால், இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இது வெறும் பணத்திற்கு மட்டுமல்ல. உங்களது தங்க நகையை கூட உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் யாராவது கடனாக வாங்கி இருக்கலாம். உங்களுடைய நகையை அடகு வைத்து அதன்மூலம் தொகையை பெற்று, அந்த நகையை உங்களுக்கு திரும்பவும் மீட்டு கொடுக்காமல் இருக்கும் பட்சத்திலும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பயன் அடையலாம்.

முதலில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, மகாலட்சுமியிடம் உங்களது பணம் உங்கள் கைக்கு திரும்ப வர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக சிறிய அளவில் பித்தளை சொம்பு எல்லோரது வீட்டிலும் இருக்கும். இதை கலச சொம்பு என்றும் சொல்லுவார்கள். அந்த சொம்பை ஒரு தாம்புள தட்டின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். அந்த சொம்பு நிறைய நல்ல தண்ணீரை ஊற்றி நிரப்பி விடுங்கள்.

sombu

அந்தச் சொம்பின் வாய்ப் பகுதியில் உள்ளது உள்ளங்கைகளை வைத்து நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ அவர்களது பெயரை உச்சரித்து, அந்த நபரே மனம் மாறி அந்த தொகையை உங்களது கையில் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களுடைய பணம் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டும் என்று மனதார உச்சரித்து வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து நீங்கள் கடன் கொடுத்த அந்தப் நபரின் பெயரை எழுதிக்கொள்ளலாம். நீங்கள் கடன் கொடுத்த நேரம், நாள், கிழமை, திதி இவை அனைத்தும் தெரிந்தால் எழுதலாம். தெரியவில்லை என்றால் அந்த நபரின் பெயரை மட்டும் எழுதி, அந்த காகிதத்தை ஒன்பது துண்டுகளாக கிழித்து, உங்கள் முன் இருக்கும் பித்தளை சொம்பு தண்ணீரில் அந்த காகிதத்தை போட்டு விடுங்கள்.

paper-tear

9 நாட்கள் தொடர்ந்து, இந்த பரிகாரத்தை செய்து வந்தால், நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் உங்களை ஏமாற்றிய வராக இருந்தாலும் சரி, அல்லது உங்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று நினைத்து அவருக்கு தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும் சரி, எல்லா நிலைமையும் சரியாகி, உங்களது பணம் உங்கள் கைக்கு நிச்சயம் வந்து சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வைக்கும் செடியின் மண் வளம் நன்றாக இருக்க இந்த 1 பொருள் இப்படி போட்டால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.