உங்கள் வீட்டில் வடக்கு திசையில் இந்த ஒரே 1 பொருள் இருந்து விட்டால் போதும். குடும்ப கஷ்டம் மொத்தமும் தீரும். ஆயுசுக்கும் சந்தோஷமாக வாழலாம்.

family-deepam
- Advertisement -

நம்முடைய குடும்பம் மொத்தமும் ஆயுசு முழுக்க சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன தெரியுமா. அடுத்த குடும்பத்திற்கு, அடுத்த உயிரினத்திற்கும் தீங்கு நினைக்க கூடாது. துரோகம் நினைக்க கூடாது. அடுத்தவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன்னுடைய குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இந்த மனப்பான்மை ஒவ்வொருவது மனதிலும் வந்துவிட்டாலே போதும். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜீவ ராசியும் ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக இருக்கும். இந்த உண்மை தெரிந்தும் இதை நம்மால் கடைபிடிக்க முடியாத சூழ்நிலை. என்ன செய்வது. இதுதான் எதார்த்தமான வாழ்க்கையும் கூட.

ஒருவருடைய தோல்வியையில் தான் இன்னொருடைய வெற்றி இருக்கிறது. அடுத்தவர்களை தோற்கடிக்க செய்யாமல் நம்மால் வெற்றி அடையவே முடியாது. இந்த இடத்தில் அடுத்தவர்களுடைய துக்கம் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் சூழ்நிலை. இதுதான் எதார்த்தம் என்று தெரிந்தாலும் கூடுமானவரை அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் வாழ பழகிக் கொள்வோம் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் வாஸ்துபடி வீட்டில் வடக்கு திசையில் இதற்காக நாம் எந்த பொருளை வைக்க வேண்டும். பிரம்மாண்டமான விநாயகர் உருவத்தைக் கொண்ட யானை. யானையின் ரூபம் தான் விநாயகருக்கு இருக்கிறது. இந்த யானை முகத்தவனை, யானை ரூபத்திலேயே கொண்டு வந்து நம் வீட்டில் வடக்கு திசையில் அமர வைக்க வேண்டும். யானையின் தும்பிக்கையானது வடக்கு நோக்கியவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். எந்த யானை பொம்மையை எப்படி வேண்டும் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். பெரிய யானையோடு குட்டி யானை சேர்ந்து இருப்பது போல பொம்மை, சீனரி எது கிடைத்தாலும் அந்த யானையை வடக்கு திசையில் வையுங்கள். தும்பிக்கை வடக்கு திசையை பார்க்க வாறு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்களுக்கு கொஞ்சம் வசதி உள்ளது என்பவர்கள் ஒரு சிறிய யானையை வெள்ளியில் வாங்கி மேல் சொன்ன திசையின் படி உங்களுடைய வீட்டில் வைத்து விட்டால் இன்னும் பல மடங்கு நன்மைகள் நடக்கும். சண்டை சச்சரவோடு நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் கூட நிரந்தரமான நிம்மதி நிலவும். இது ஒரு சின்ன வாஸ்து ரீதியான குறிப்பு தான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த தவறை செய்கிறார்கள். வீட்டிற்கு விருந்தாளிகளோ நண்பர்களோ யார் வந்தாலும் சரி அவர்களை வீட்டின் படுக்கை அறை வரை அழைத்துச் செல்வார்கள். கூடுமானவரை நம் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை நம்முடைய படுக்கை அறை வரை கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. அது குடும்பத்தின் நிம்மதியை நிலைகுலைக்க செய்யும். வருபவர்களை வரவேற்பு அறையிலோ அல்லது உங்கள் வீட்டின் வேறு ஏதாவது அறையிலோ அமர வைத்து பேசலாமே தவிர, எல்லோரையும் படுக்கையறை வரை கூட்டிச் செல்லக்கூடிய பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இப்படி மூன்றாவது நபரை படுக்கையறை வரை கூட்டிச்செல்லும் போது கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. வருபவர்கள் எல்லோரையும் நாம் தவறாக கணக்குப் போட்டு விட முடியாது. எல்லோரும் நல்ல மனம் கொண்டவர்களாக இருந்தாலும் சில பேருடைய ஏக்கம் கண் திருஷ்டியாக மாறி அது நம் சந்தோஷத்தை நிலை குலைந்து விடும்.

எதற்கு பிரச்சனை. கூடுமானவரை வருபவர்களை வரவேற்பறையில் அமர வைத்து உபசரித்து மகிழ்ச்சி அடைய வையுங்கள். வீட்டிற்கு வருபவர்களை படுக்கை அறை வரை அழைத்து வந்து உபச்சாரம் செய்தால் தான் மரியாதை என்று நமக்கு எந்த இடத்திலையும் சொல்லி வைக்கவில்லை‌. நீங்கள் யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களுடைய படுக்கையறை வரை செல்லாதீங்க அது நாகரீகமும் கூட, என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -