வடக்கு திசையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்திருந்தால் கூட, வீட்டில் நிச்சயம் பண கஷ்டம் ஏற்படும். கையில் இருக்கும் பணம் வீணாக செலவாகும்.

fish-tank
- Advertisement -

யாராவது நமக்கு பிடிக்காத விஷயங்களை நம் அருகில் எடுத்து வந்தால், நமக்கு எவ்வளவு கோபம் வரும். நம்மை அறியாமலேயே அந்த சமயத்தில் கோபத்தில் எதிர்மறையான விஷயங்களை செய்து விடுவோம். நமக்கு பிடிக்காத பொருளை நம் கிட்டே கொண்டு வந்த நபரை சில சமயம் திட்டி இருப்போம் சிலசமயம் அடி கூட கொடுத்திருப்போம். வாஸ்துவிற்கும் இந்த விஷயம் நிச்சயம் பொருந்தும்.

சில திசைகளில் ஒத்துவராத சில பொருட்களை கொண்டுபோய் வைக்கும்போது அது நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். பஞ்சபூதங்களில் நீர் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பது வடக்குத் திசை. வடக்குத் திசையில் வீட்டில் எந்தெந்த பொருட்களை எப்படி வைக்க வேண்டும். எந்த பொருட்களை எப்படி வைக்கக்கூடாது என்பதை பற்றிய வாஸ்து சம்பந்தப்பட்ட குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

- Advertisement -

நம்முடைய வீட்டில் வடக்கு திசையில் இருக்க வேண்டிய பொருட்கள் என்றால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும். வடக்கு திசையில் மீன் தொட்டியை வைக்கலாம். சிறிய உருளியில் தண்ணீரை நிரப்பி வண்ண வண்ண மலர்களை போட்டு வைக்கலாம். குறிப்பாக வெள்ளை மலர்களை அந்த உருளியில் போட்டு வைப்பது மிக சிறப்பான ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் வடக்கு திசையை நோக்கி இருக்கக்கூடிய சுவற்றில், நீர்வீழ்ச்சி, அதாவது அருவி கொட்டுவது போல புகைப்படங்களை மாட்டி வைத்தால் கூட போதுமானது. வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி கொட்டும் நீர்வீழ்ச்சி படம். (வடக்கு திசையில் இருக்கக்கூடிய சுவற்றில் இந்த படங்களை நீங்கள் மாட்டி வைத்தால், இந்தப் படம் தெற்கு நோக்கி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

வடக்குத் திசையில் இருக்கக்கூடிய சுவற்றில் வெள்ளை நிற சுண்ணாம்பு அல்லது பெயிண்ட் அடிப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்கும். ஆனால் எல்லோராலும் செலவு செய்து சுவற்றில் இருக்கும் வண்ணத்தை மாற்ற முடியாது. ஆகையால் முக்கோண வடிவத்தில் வெள்ளை நிற சார்ட் அல்லது வெள்ளை நிற பேப்பரை வெட்டி கூட நீங்கள் அந்த வடக்கு திசையில் இருக்கும் சுவற்றில் மாட்டி வைத்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

முக்கோண வடிவத்தில் வெள்ளை நிற காகிதத்திற்கு உள்ளே அழகாக ஓவியங்கள் சீனரீஸ் எது இருந்தாலும் அதை வாங்கி வடக்கு சுவற்றில் மாட்டி வைத்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். வாஸ்து ரீதியாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் விஷயமாகவும் அமையும்.

குறிப்பாக வடக்கு திசையில் உலோகம் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் வைத்து விடக்கூடாது. முழுமையாக கண்ணாடி சம்பந்தப்பட்ட பொருள், பீங்கான் சம்பந்தப்பட்ட பொருள், செராமிக் பொம்மைகள், பாரம் அதிகமாகக் கொடுக்கும் இரும்பு பொருட்கள், எதையுமே வைக்க வேண்டாம். சிலபேர் அழகிற்காக கிறிஸ்டல் பொம்மைகளை அழகு சாதன பொருட்களை வடக்கு திசையில் வைத்திருப்பார்கள். அதுவும் ஒரு குறைபாடாக தான் சொல்லப்பட்டுள்ளது.

மெட்டல் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் வடக்கு திசையில் வைக்காதீங்க. உங்க வீட்ல ஒரு வேலை பணத்திற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டால், வற்றாத வறுமை வீட்டில் இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க. நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -