நாளை (26/5/2022) வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி! பெருமாளுக்கு இதை வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டால் சேராத செல்வம் எல்லாம் சேரும்! செய்த பாவங்கள் ஒழியும்!

perumal-thulasi-vilakku
- Advertisement -

வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி ரொம்பவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை காக்க விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்தது இந்த வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் தான். அதே போல வைகாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி அன்றும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு சேராத செல்வம் எல்லாம் சேரும், பாவங்கள் ஒழியும் என்பது நியதி. ஏகாதசி வழிபாடு எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

ஏகாந்தம் அருளும் ஏகாதசி நாளன்று விஷ்ணு பகவானை நினைத்து விரதமிருந்து முறையாக வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் மீண்டும் உங்களை வந்தடையும், சேராத செல்வம் எல்லாம் சேரும். தொழில் நஷ்டம், வியாபார விருத்தி இன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் ஏகாதசி விரதமிருந்து வழிபடலாம். செல்வம் சேர்வது மட்டும் அல்லாமல் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு.

- Advertisement -

விஷ்ணு பகவான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் முரன் என்னும் அசுரன் அவரைக் கொல்லத் துணிந்த பொழுது விஷ்ணு பகவானுடைய உடலில் இருந்து வெளி வந்த ஒரு ஒளி வடிவத்தில் வந்த பெண்ணினுடைய பெயர் தான் ஏகாதசி ஆகும். அந்தப் பெண்ணில் இருந்து வெளி வந்த ஒளியின் ஆற்றலில் அசுரன் எரிந்து மடிந்து போய் விட்டான் என்கிறது புராணங்கள். ஏகாதசி என்னும் சக்தி வாய்ந்த ஒளியானது, விழிப்பில் இல்லாத விஷ்ணு பகவானை காப்பாற்றியதால் அவளுக்கு இப்பெயரை வழங்கி உன்னுடைய திதியில் விரதமிருந்து கண்விழித்து வழிபடுபவர்களுக்கு பூரண அருள் கிடைக்கும் என்கிற வரத்தையும் கொடுத்தார். எனவே ஏகாதசி நாளன்று விழிப்புடன் இருந்து பரந்தாமனை வழிபட்டால் கேட்ட வரம் அப்படியே கிடைக்கும்.

ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் உள்ளன. அதில் வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச திதியில் வரக்கூடிய நாளைய ஏகாதசியை ‘வருதிந்’ என்று கூறப்படுகிறது. பிரம்மன் கொண்ட சாபத்தால் அவருடைய நான்காவது தலையை இழந்து தோஷத்தை பெற்றுக் கொண்டார் சிவன். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய நாளாக இந்நாள் இருக்கிறது. எனவே நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கவும் இந்த நாளில் விரதமிருந்து வழிபடலாம்.

- Advertisement -

நாளைய நாளில் பெருமாள் படத்திற்கு முன்பாக அவருக்கு உகந்த நைவேத்தியங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு படைத்து இரண்டு புறமும் குத்து விளக்கு ஏற்றி பூஜை அறையில் ஐந்து முகங்களிலும், ஐந்து முக திரி இட்டு, ஐந்திலும் விளக்கு ஏற்ற வேண்டும். துளசி மாலை அணிவித்து, துளசி தீர்த்தம் தயாரிக்க வேண்டும். பின்பு காலை முதல் மாலை வரை விரதம் இருக்க வேண்டும் அல்லது ஏகாதசி திதி முடியும் வரை விரதம் இருப்பது இன்னும் நல்லது.

பிறகு விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, விஷ்ணு ஸ்தோத்திரங்கள் உச்சரிப்பது போன்றவற்றையும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள். உயிரைக் கொன்ற பாவத்தையும் போக்கக்கூடிய இந்த அற்புதமான ஏகாதசி நன்னாளில் நீங்கள் அறியாமலோ செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -