வைகாசி வளர்பிறை சஷ்டி(17/5/21) இவற்றை செய்தால் உங்கள் எதிரிகள் அழிவர்! எத்தகைய துன்பங்களும் நீங்க இந்த நாளை தவர விட்டுவிடாதீர்கள்!

- Advertisement -

சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் காலம் வைகாசி மாதம் ஆகும். இம்மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமானது. முருகப் பெருமானுக்கு கார்த்திகை மாதம் மிகவும் உகந்ததாகும். அதற்கடுத்த உகந்த மாதம் வைகாசி மாதம் தான். விசாகன் என்ற அசுரனை வதம் செய்தது இந்த மாதத்தில் என்பதால் தான் வைகாசி விசாகம் பெருமளவு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகாசி வளர்பிறை சஷ்டியில் முருகனை எப்படி பூஜிக்கலாம்? அதனால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

murugan-silai-abishegam

வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம் சுக்கிர யோகத்தை பெறலாம். வைகாசியில் சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் வெண்ணிற வஸ்திரம் சாட்சி, வெண்பொங்கல் நிவேதனம் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சுகபோக வாழ்க்கை அமையும்.

- Advertisement -

வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி சுத்தமான உடை உடுத்தி பூஜை அறையை சுத்தம் செய்து, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபட வேண்டும். சந்தனம் மற்றும் மஞ்சள் இட்டு கொண்டு வாசனை மிகுந்த மலர்களால் முருகப்பெருமானை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் வேல் வைத்து இருப்பவர்கள் அந்த வேலுக்கு பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

murugan

நைவேத்தியம் வைக்க முருகப் பெருமானுக்கு இனிப்பு பதார்த்தங்கள் செய்யலாம். சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற ஏதாவது ஒன்றை வைத்து முருகனை அன்றைய தினம் முழுவதும் மனதார துதித்து வழிபடுவது யோகம் தரும். அல்லது சித்திரன்னங்கள் எனப்படும் கலவை சாதங்களை செய்தும் படைக்கலாம். காலை முதல் மாலை வரை உணவேதும் உண்ணாமல் உபவாசம் இருந்து முருகன் கவசம், சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், ஸ்லோகங்கள் மற்றும் முருகன் மந்திரங்களை உச்சரிப்பது யோகம் தரும்.

- Advertisement -

பின்னர் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபடலாம். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முருகனுக்கு பூஜை செய்யலாம். நாள் முழுவதும் விரதம் இருப்பவர்கள் உண்ணாவிரதத்துடன், மவுன விரதம் இருந்தால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி பல்வேறு விசேஷமான பலன்கள் உண்டாகும். மாலையில் முருகனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்த பின் விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

agal-vilakku

முருகனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றலாம் அல்லது ஆறுமுகனுக்கு ஏற்ற வேண்டி ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடலாம். வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருக்கும் பாதிப்புகள் நீங்கவும் செய்யும். அசுரர்களை அழித்த முருகப்பெருமானை வணங்கும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் அசுரர்கள் போன்ற எதிரிகளும், பகைவர்களும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களும் ஒழிந்து போவர். நமக்கு எதிராக செயல்படும் சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடு பொடியாகும். கந்தனின் கருணையால் சஷ்டி விரதமிருந்து முருகனை நினைந்து வீட்டிலேயே வழிபட்டு பெறற்கரிய பலன்களை பெற்றுக் கொள்வோம்.

- Advertisement -