இன்று சங்கடஹர சதுர்த்தி. வேண்டியதெல்லாம் உடனே நடக்க இன்று மாலை விநாயகருக்கு இந்த பூவை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

pillaiyar-prayer
- Advertisement -

இன்று வைகாசி மாதம் தேய்பிறையில் வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதி. இன்றையதினம் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து போகும் என்பது நம்பிக்கை. இன்றைய தினத்தில் நம்முடைய கஷ்டங்கள் கரைய, கடன் சுமை குறைய, செல்வ வளம் பெருக, விநாயகப் பெருமானை எந்த நேரத்தில் எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வழக்கம் போல ஏதாவது விரதம் இருக்கவேண்டும் என்றால், வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இன்று மாலை 6.00 மணியிலிருந்து 8.30 மணிக்குள் இந்த பூஜையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

- Advertisement -

காலையிலேயே நீங்கள் குளித்து சுத்தமாகி இருந்தாலும், மீண்டும் மாலை ஒரு முறை சுத்தமாக குளித்து விடுங்கள். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் விநாயகர் சிலை இருந்தால் அதற்கு கட்டாயமாக பாலபிஷேகம் செய்ய வேண்டும். சிலை இல்லை வெறும் திருவுருவப்படம் தான் இருக்கிறது என்றால் அந்த படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விநாயகருக்கு அருகம்புல் வாசனை நிறைந்த பூவை வைத்து அலங்காரம் செய்து விடவேண்டும்.

உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு முடிந்த நிவேதனம் ஏதாவது ஒரு இனிப்பு நிவேதனமாக விநாயகருக்கு செய்து வைக்கவேண்டும். கொழுக்கட்டை, லட்டு, பாயசம், எதுவாக இருந்தாலும் அது உங்களுடைய சவுகரியம். அதன் பின்பு இந்த பூஜைக்கு மிக மிக முக்கியமாக நமக்கு தேவையான பொருள் 3. செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, அருகம்புல், இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இத்தனை பூக்கள், இலை என்ற கணக்கெல்லாம் கிடையாது. உங்களுக்கு கிடைத்ததை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

விநாயகர் படத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்து தட்டில் இருக்கக்கூடிய பூக்கள் இலைகளை ஒருசேர எடுத்து விநாயகப் பெருமானுக்கு உங்கள் கையால் அர்ச்சனை செய்யவேண்டும். 27 முறை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இருபத்தி ஏழு முறைக்கு மேல் மந்திரத்தைச் சொன்னாலும் அதன் மூலம் எந்த தவறும் கிடையாது.

அர்ச்சனை செய்து முடித்துவிட்டு, அதன் பின்பு ஒரு ஐந்து நிமிடம் போல பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் விநாயகப்பெருமானின் பாதங்களில் இறக்கி வைத்து, அந்த சங்கடங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். (இதேபோல 11 சங்கட ஹர சதுர்த்தி, 21 சங்கடஹரசதுர்த்தி என்று வழிபாட்டினை தொடர்ந்து வழிபாடு செய்து வர நிறைய நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும்.) நிவேதனத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிடலாம். காலையிலிருந்து சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிட்டாலும் பரவாயில்லை, இந்த பூஜை செய்வதன் மூலம் முழு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -