- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு

வைகாசி மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய கிழமை என்றும் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காக அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சிறப்பு மிகுந்த மாதங்களாக கருதக்கூடிய மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைக்கு அபரிவிதமான பலன் உண்டாகும். அந்த வகையில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறக்கூடிய வைகாசி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று எந்த முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் பணவரவு உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வைகாசி மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு

பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் நம் அனைவருக்கும் இருக்கும். பணவரவு அதிகரிப்பதற்காக நாம் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால்தான் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். அந்த முயற்சிகளின் மூலம் பணவரவு என்பது நமக்கு கிடைக்கும். அந்த வகையில் பணவரவை அதிகரிப்பதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வைகாசி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளிக்கின்ற நீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்து தலைக்கு குளித்துவிட்டு மகாலட்சுமியின் அம்சமாக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் பூஜைக்கு தயாராக வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே அதாவது காலை 6:00 மணிக்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர கோரை வரும் அந்த நேரத்தில் வீட்டு நிலை வாசலை பன்னீரை வைத்து சுத்தம் செய்து மஞ்சள், பச்சை கற்பூரம், கிராம்புத்தூள், பட்டை தூள், ஏலக்காய் தூள் போன்றவற்றை கலந்து நிலை வாசலுக்கு மஞ்சள் தடவி ஒன்பது இடங்களில் குங்குமம் வைத்து மலர்களை சூட்டி நிலைவாசல் பூஜையை செய்ய வேண்டும்.

அடுத்ததாக வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர்களை பச்சை நிற நூலால் கட்டி மாலையாக போட வேண்டும். அதிலும் குறிப்பாக மல்லிகை, சம்மங்கி போன்ற பூக்களை கட்டி மாலையாக போடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நெய்வேத்தியமாக பால் பாயாசத்தை வைத்து வடக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விடுங்கள். அந்த தீபத்தில் ஆறு டைமண்ட் கற்கண்டை போட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி வாசனை மலர்களாலோ, குங்குமத்தாலோ அல்லது நாணயங்களாலோ அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு ஊதுபத்தி தூபம் காட்டும் பொழுது ஆறு எண்ணிக்கையில் சந்தன ஊதுபத்தியை பொருத்தி தூபம் காட்டி வைக்க வேண்டும். சாம்பிராணி தூபமும் காட்டி கடைசியாக கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் அல்லது நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் “ஸ்ரீம் ப்ரீஸி” என்னும் மந்திர வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணவரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கனவில் வரக்கூடாதவை

எளிமையான வழிமுறையாக இருந்தாலும் இந்த வழிமுறையை சரியாக பின்பற்றி வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அதன் மூலம் பணவரவும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்